கவனிக்கப்படாத பன்னங்கண்டி மக்களின் காணிக்கான போராட்டம்

Published By: Robert

07 Apr, 2017 | 12:23 PM
image

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி மக்கள் இன்று 17வது நாளாக தங்களின் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற போதும் அவர்களின் போராட்டம் அரசியல் மற்றும் அதிகாரிகள் தரப்பால் கண்டுகொள்ளப்படவில்லை என பன்னங்கண்டி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஊடகவியலாளர்கள் மாத்திரம் நாளாந்தம் வருகை தந்து தங்களின் பிரச்சினைகளையும் உணர்வுகளை  வெளிப்படுத்தி வருகின்றார்கள்,  பன்னங்கண்டி பசுபதிகமம் மக்களின் பிரச்சினையும் ஊடகவியலாளர்களின் முயற்சியனாலேயே தீர்க்கப்பட்டது. அதேபோல் எங்களின் பிரச்சினைகளையும் கரிசனையோடு வெளிப்படுத்தி வருகின்றார்கள் எனத் தெரிவித்த பன்னங்கண்டி மக்கள்,

தமது குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும் அடிப்படை வசதிகள் நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன  இதுவரை கிடைக்கவில்லை எனவே  இவ்வளவு காலமும் அடிப்படை உரிமை இல்லாத மக்களாக வாழ்ந்து விட்டோம் இனியும் வாழ முடியாது தயவு செய்து எமக்கான காணி உரிமத்தினை வழங்குங்கள் எனக் கோரி இன்று 17வது நாளாக தங்களது தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம்.

அத்துடன்  தமக்கான  காணி உரிமம்  கிடைக்கும் வரை  போராட்டம் தொடரும் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10