போலியான இந்திய கடவுச் சீட்டுக்களைப் பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேற முயன்ற மூன்று இலங்கையர்களை சென்னை விமான நிலைய பொலிஸார் கைது செய்தனர்.

திருச்சியில் இருந்து சென்னை வந்த இம்மூவரும், அங்கிருந்து துபாய் வழியாக அயர்லாந்துக்குப் புறப்படவிருந்தனர். அவர்களது கடவுச் சீட்டுக்களைப் பரிசோதித்த விமான நிலைய அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அவர்களை விசாரணைக்கு உட்படுத்தினர்.

அப்போது, தாம் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும் போலி கடவுச் சீட்டுக்களைப் பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயற்சி செய்ததாகவும் ஒத்துக்கொண்டனர். இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.