(ந.ஜெகதீஸ்)

மாணவர்களின் கல்வி உரிமையை பறிப்பதற்கே அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். புத்தாண்டை இலக்கு வைத்து மக்களை சிறைப்படுத்தி தமது கோரிக்கைகளில் வெற்றிபெற முயல்வதாக ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் குற்றம் சுமத்தினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

அவர் மேலும் குறிப்பிடுகையில் 

மாலபே தனியார் மருத்துவக்கல்லூரிக்கு எதிராக நாளை நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் இதுபோன்றே பல முறை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு மக்களை பெரும் அசௌகரியத்துக்குள்ளாகும் வகையில் செயற்பட்டுள்ளனர். 

இந்நிலையில் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் புத்தாண்டான  சித்திரை புத்தாண்டு நெருங்கிவரும் காலப்பகுதியில் அதனை கவிழ்ப்பதற்கும் குறித்த புத்தாண்டை இலக்கு வைத்து மக்களை சிறைப்படுத்தவே அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்குகின்றது எனவும் குறிப்பிட்டார்.