மறைந்த அமரபுர மகாநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய தவுல்தென்ன ஸ்ரீ ஜினநிசார தேரரின் பூதவுடலுக்கு இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சத்து அஞ்சலி செலுத்தினார்.

நுகோகொடை, பாகொடயிலுள்ள தியான இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த தேரரின் பூதவுடலுக்கு இந்திய உயர்ஸ்தானிகர் சென்று அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.