இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டி ஆர். பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பித்துள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில்  வெற்றிபெற்றுள்ள பங்களாதேஷ்  அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கவுள்ளது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரரான தமிம் இக்பாலுக்கு பதிலாக இம்ருல் கையிஸ் மற்றும் டஸ்கின் அஹமட்டுக்கு பதிலாக மெஹிதி ஹசனும் அணில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இலங்கை அணியில் எந்த மாற்றங்களும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி :

உபுல் தரங்க (அணித் தலைவர்), டில்ஷான் முனவீர, குசல் பெரேரா, லசித் மலிங்க, நுவான் குலசேகர, விகும் சஞ்சய, மிலிந்த சிறிவர்தன, அசேல குணரத்ன, சீகுகே பிரசன்ன, சாமர கபுகெதர, திசர பெரேரா

பங்களாதேஷ் அணி :

இம்ருல் கையிஸ் , சௌமிய சர்கார், சபீர் ரஹ்மான், முஸ்தபஹுர் ரஹ்மான், கசிப் அல் ஹசன், மஹமதுல்லா, மொஸ்டாக் ஹுசைன், மெஹிதி ஹசன், மஸ்ரபீ மொர்டஷா (அணித் தலைவர்) மெஹிதி ஹசன், முஸ்தபிஹுர் ரஹமான்.