எமது நகரில் முன்னைய காலங்களில் நாம் நடந்து செல்கையில் கண்களுக்கு விருந்தளிக்கும் அழகிய பூங்காக்கள் தற்போது வேகமாக மறைந்து வருகின்றன.

நகரமயமாக்கல் காரணமாக இவை காணாமல் போகின்றன. முழு நகருக்கும் காணப்படும் ஒரே பூங்காவாகரூபவ் நகர மண்டப பகுதியில் அமைந்துள்ள விஹாரமஹாதேவி பூங்காவை குறிப்பிட முடியும். பாரிய வணிக கட்டிடங்கள் மற்றும் தொடர்மனைகள் நிர்மாணிக்கப்படுகின்றமையின் மூலமாக, நகருக்கு பெரும் அனுகூலம் சேர்க்கப்படுவதுடன்ரூபவ் நகரின் மையத்தில் காணப்படும் ஒரு சில பச்சைபசேலென காணப்படும் சோலைகளும் மறைந்த வண்ணமுள்ளன இதன் காரணமாக நகரின் வெப்பநிலை பெருமளவு அதிகரிப்பதுடன் மக்களுக்கு அழுத்தங்களுடனான சுகயீனங்களும் ஏற்படுகின்றன.

மக்களின் நலனை உறுதி செய்வதுடன் நிலைபேறான வாழ்விடங்களை உறுதி செய்வதுடன் நகரின் கவர்ச்சி தன்மையை மேம்படுத்துவதற்காக Wallspan நிறுவனம் அபிவிருத்தி செயற்பாடுகளை பாதிக்காத வகையில் கொழும்பு நகரை பூங்கா நகராக மாற்றியமைக்கத்திட்டமிட்டுள்ளது. architectural building façade, rain screen cladding, decorative cladding மற்றும் curtain wall facade போன்ற தீர்வுகளை வழங்குவதில் றுயடடளியn நிறுவனம் நிபுணத்துவம் பெற்றுள்ளது.

“living façade” எனும் திட்டம் குறித்து Wallspan நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கான பணிப்பாளர் ரம்ஸீன் ரவுஃவ் கருத்துத் தெரிவிக்கையில்,

“Plante living façade என்பது செங்குத்தான பூங்காவாகும். அதிகளவு மக்கள் செறிந்து வாழும் நகர் பகுதிகளை இயற்கையுடன் மீள இணைக்கும் வகையில் அமைந்துள்ளன. சோபை இழந்த மற்றும் சாம்பல் நிறமான சுவர்களை பச்சைப்பசேலென வளர்ந்த சோலையைப் போல தாவரங்களைக் கொண்டு செங்குத்தான வளர்ப்பு முறையை கொண்டுள்ளது.

உயரமான கட்டிடங்கள், அலுவலகங்கள், தொடர்மனைகள், தனிநபர் இல்லங்கள் அல்லது ஏனைய எந்தவொரு கட்டமைப்பிலும் சுவர்களை அழகுபடுத்த இந்த முறையை பயன்படுத்தலாம்.” என்றார்.

நாட்டின் மிக உயரமான செங்குத்தான பூங்காவை ஐந்து நட்சத்திர Movenpick ஹோட்டலில் Wallspan நிறுவனம் நிறுவியிருந்தது. இதற்காக 33000க்கும் அதிகமான தாவரங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இலங்கைக்கு இது புதிய விடயமாக அமைந்திருந்த போதிலும் சிங்கப்பூர் உள்ளடங்கலாக பல்வேறு அபிவிருத்தியடைந்த நாடுகளில் நகரின் கட்டமைப்பை மாற்றியமைப்பதில் living facades பெருமளவு பங்களிப்பை வழங்கியிருந்தது. சிங்கப்பூர் தற்போது சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற பூங்கா நகராக திகழ்கிறது.

living facades நகருக்கு அழகு சேர்ப்பதுடன் பல இதர அனுகூலங்களாக சுகாதார மற்றும் சூழல் அனுகூலங்களையும் வழங்குகிறது. பச்சை facades தொடர்பில் உலகப் புகழ்பெற்ற வல்லுநர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆய்வுகளின் மூலமாக காற்று மாசடைதல் குறைவதுடன் ஒலி அமைப்பு மற்றும் நகர வெப்பம் குறைவடைதல் போன்றன இடம்பெறுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. Living facades இனால் வளியில் காணப்படும் துணிக்கைகள் வடிகட்டப்பட்டு, வளி மாசடைதல் குறைக்கப்படுகிறது. வெப்பக்கதிர்களின் தாக்கத்தை குறைப்பதாகவும் அமைந்துள்ளன.

வெப்ப கதிர்களை 50 சதவீதம் வரை தாவரங்கள் கட்டுப்படுத்தும் என்பது நவீன ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் living façade என்பதன் மூலமாக, ஒலி மாசடைதலும் கட்டுப்படுத்தப்படுகிறது. “living façade ன் ஆரம்ப செலவீனம் என்பதுரூபவ் அதன் மூலமாக வழங்கப்படும் சுகாதார மற்றும் இதர அனுகூலங்களுடன் ஒப்பற்றதாக அமைந்துள்ளது” என்றார்.

தோட்டங்களில் வளர்க்கப்படும் தாவரங்களை போலன்றி செங்குத்தாக தாவரங்கள் வளர்க்கப்படுகின்றமையால் அவற்றுக்கு அடிக்கடி நீர் வழங்குவதுரூபவ் உரம் இடுவது மற்றும் போசணைகளை சேர்ப்பது என்பது சவால்கள் நிறைந்த விடயமாகும். Wallspan இனால் முழுமையாக தன்னியக்கமான நீர்ப்பாசன மற்றும் திரவ உரம் வழங்கும் கட்டமைப்பு பயன்படுத்தப்படுகிறது. மிகவும் உயரமான கட்டிடங்களுக்கான இந்த கட்டமைப்பு விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. விசேடமான பாதுகாப்பு உள்ளம்சங்களையும் கொண்டுள்ளது.

தனிநபர் தெரிவுகளின் பிரகாரம் தாவரங்களை தெரிவு செய்து கொள்ள முடியும் என்பதுடன் குறித்த பகுதிகளில் நிலவும் காலநிலை மற்றும் அவை வளர்வதற்கு காணப்படும் இடர்கள் குறித்தும் கவனம் செலுத்தப்படும். living façade ல் காணப்படும் மற்றுமொரு விசேட அம்சமாக பாவனையாளரால் தாவரங்களை இடம்மாற்றிக் கொள்ள முடியும் ஒரே தோற்றத்தை தினசரி பார்வையிட வேண்டியதில்லை. இதில் Wallspan ன் உயர் பொறியியல் இயலுமை பங்களிப்பு வழங்குகிறது. நெரிசலான நகரில் போதியளவு இடமின்மை காரணமாக குடியிருப்பு மட்டத்தில் பெருமளவான வீட்டுத் தோட்டங்கள் வாகன தரிப்பிடங்களாக மாற்றம் பெற்றுள்ளளன. இதன் காரணமாக சொகுசான தோட்டங்களை அனுபவிக்க முடியாத நிலை காணப்படுகிறது. மட்டுப்படுத்தப்பட்ட இடவசதியுடன் செங்குத்தான தோட்டத்தை தனி வீட்டு உரிமையாளர்கள் பொருளாதார மற்றும் பெறுமதியான பொறியியல் தீர்வை அனுபவிக்க முடியும்.

“Living facades என்பது பாவனையாளர்களுக்கு பரந்தளவு அனுகூலங்களை பெற்றுக்கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை என்பது பெருமளவு பங்களிப்பை வழங்கும் நிலையில், living facades இனால் இலங்கையின் தலை நகரை அழகிய நகராக மாற்றியமைக்கும் வகையில் கவர்ச்சிகரமாக மாற்றியமைப்பதற்கு பங்களிப்பு வழங்கப்படுகிறது.” என ரவுஃவ் தெரிவித்தார். இவர் façade துறையில் பத்து ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

பிரித்தானியாவில் இவர் புகழ்பெற்ற் கட்டடக் கலைஞர்கள் வடிவமைப்பாளர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். கடந்த சில ஆண்டுகளில் புத்தாக்கமான உயர் தரம் வாய்ந்த மற்றும் நிலைபேறான cladding தீர்வுகளை இலங்கையில் இந்நிறுவனம் அறிமுகம் செய்த பெருமையைக் கொண்டுள்ளது. ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் போன்ற உலக புகழ்பெற்ற உற்பத்தியாளர்களிடமிருந்து பொருட்களை தெரிவு செய்து கொள்ளக்கூடிய வசதி வழங்கப்படுகிறது.

இதனூடாக வாடிக்கையாளர்களுக்கு நவீன தொழில்நுட்பம் மற்றும் நிலைபேறான பொருட்கள் ஆகியவற்றை நீண்ட கால அனுகூலத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. Wallspan என்பது அலங்கார சமூகத்தில் நம்பிக்கையை வென்ற நாமமாக அமைந்துள்ளது. இதில் புகழ்பெற்ற வாடிக்கையாளர்களான Softlogic Life, Dialog, Odel, Prime Residencies, Mobitel, Movenpick City Hotel மற்றும் வெவ்வேறு பல்கலைக்கழகங்கள் வங்கிகள் மற்றும் இதர விற்பனை, கூட்டாண்மை மற்றும் அரச நிறுவனங்கள் போன்றன அடங்கியுள்ளன.

நிறுவனம் முன்னணி தொழில்நுட்பங்களை வழங்குவதில் முன்னணியில் திகழ்கிறது. EXTEC Cladding, Light Clad, PERF Clad, Archizinc cladding, BIPV Solar glass போன்றன இவற்றில் அடங்கியுள்ளன. Wallspan அணி, தனது கட்டடக்கலை நிபுணத்துவ உதவிகளையும் உள்ளக மற்றும் landscape designers கூட்டாண்மை மற்றும் தனி இல்ல உரிமையாளர்களுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் தன்னை அர்ப்பணித்துள்ளது. living facades பற்றிய மேலதிக விவரங்களை நிறுவனத்தின் ஹொட்லைன் இலக்கமான 0770881558 அல்லது 0117470055 தொடர்பு கொண்டும் www.wallspan.lk எனும் இணையத்தளத்திலிருந்தும் பார்வையிடலாம்.