உச்சப் பெறுபேறுகளைப் பெற்றுள்ள மாணவர்களுக்கு நவீன சிங்கர் மடிகணினிகள் ஜனாதிபதியினால் அன்பளிப்பு

Published By: Priyatharshan

06 Apr, 2017 | 03:07 PM
image

நீடித்து உழைக்கும் நுகர்வோர் சாதனங்களின் விற்பனையில் நாட்டில் முன்னிலை வகித்துவருகின்ற சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி, கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் தனது பாரம்பரியத்தைத் தொடர்ந்தும் முன்னெடுக்கும் வகையில் அண்மையில் இடம்பெற்ற பாராட்டு வைபவம் ஒன்றில் 26 நவீன சிங்கர் மடிகணினிகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

மார்ச் 28 அன்று ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வு ஒன்றி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க மற்றும் கல்வியமைச்சரான அகில விராஜ் காரியவசம் ஆகியோர் மடிகணினிகளை இந்த மாணவர்களுக்கு கையளித்து வைத்துள்ளனர்.

சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் சார்பில் குழும பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ், நிதிப் பணிப்பாளரான லலித் யட்டிவெல மற்றும் டிஜிட்டல் ஊடக துறையின் சிரேஷ்ட வர்த்தகநாம முகாமையாளரான சஹான் பெரேரா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் முதல் 12 இடங்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கும், மற்றும் உயர் தர பரீட்சையில் 7 வேறுபட்ட துறைகளில் முறையே முதல் 2 இடங்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கும் மடிகணினிகள் வழங்கப்பட்டன. நவீன Intel Core i5, அசல் Windows 10 operating system இன் வலுவூட்டலுடன் 7 th Generation Processor, 4GB RAM, 1TB Hard Disk, 15.6” HD முகத்திரை ஒருங்கிணைக்கப்பட்ட HD Web கமரா, மேம்பட்ட Intel graphics support, Wi-Fi மற்றும் Bluetooth ஆகிய தொழில்நுட்ப அம்சங்களை இந்த மடிகணினிகள் கொண்டுள்ளன.

சிங்கர் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

“எமது நாட்டிலுள்ள இளம் தலைமுறையினர், கல்வி தொடர்பான தமது கனவுகளை முன்னெடுப்பதை ஊக்குவித்து, வாழ்வில் மகத்துவத்தை அடைந்துகொள்வதற்கு வழிகோலுகின்ற தனது பாரம்பரியத்தை சிங்கர் பெருமையுடன் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது.

பொருத்தமான சாதனங்கள் மற்றும் வளங்களை அவர்களுக்கு வழங்குவதன் மூலமாக, அவர்கள் தமது கல்வி சார்ந்த இலட்சியங்களை அடையப்பெற்று, தாங்கள் பெற்றுக்கொண்ட அறிவை சிறந்த முறையில் பயன்படுத்திரூபவ் நாட்டின் நலனுக்கு பங்களிப்பார்கள் என நாம் நம்புகின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனம் நாடெங்கிலும் DELL மற்றும் சிங்கர் மடிகணினிகளை சந்தைப்படுத்தி வருகின்றது. “அனைவருக்கும் மடிகணினி” என்ற இலக்கினை ஊக்குவிப்பதற்காக, மிகவும் கவர்ச்சியான விலையில், tab சாதனமாகவும் உபயோகிக்கக்கூடிய வசதியுடன் Singer Duo சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இளம் தலைமுறையினருக்கு அவர்களின் கல்வி மற்றும் அறிவுப் பகிர்வு போன்ற வழமையான தேவைகளுக்கு உதவும் வகையில் Singer Duo விசேடமாக வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு விசேட தள்ளுபடிகள் வழங்கப்படுவதுடன் அனைத்து சிங்கர் காட்சியறைகள் மூலமாகவும் மடிகணினிகள் உள்ளிட்ட நவீன டிஜிட்டல் சாதனங்களை மிகவும் நியாயமான விலைகளில் அவர்கள் கொள்வனவு செய்ய முடியும்.

SISIL, Samsung, Hitachi, TCL, Beko, Sony, Huawei, Sharp மற்றும் Mitsubishi போன்ற உயர் தர சர்வதேச வர்த்தகநாமங்கள் பலவற்றையும் சிங்கர் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவருகின்றது. நாடெங்கிலுமுள்ள 400 மற்றும் மேற்பட்ட காட்சியறைகள் மற்றும் அதற்கு ஈடாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள விற்பனைக்குப் பின்னரான பேணற் சேவை வலையமைப்பின் மூலமாக தொடர்ந்தும் தனது வாடிக்கையாளர்களுடனான ஈபாட்டை சிங்கர் கட்டியெழுப்பி வருகின்றது.

கொள்வனவு செய்யும் வேளைகளில் வாடிக்கையாளர்களுக்கு மகத்தான சௌகரியத்தை வழங்கும் வகையில் வட்டியில்லா கொடுப்பனவுத் திட்டங்கள், விசேட தள்ளுபடிகள், பழைய உற்பத்தியைக் கொடுத்து புதிய உற்பத்தியை மாற்றுவதற்கான தள்ளுபடிகள், இலவச சலுகைகள் மற்றும் விசேட கடனட்டை சலுகைகளையும் சிங்கர் அவர்களுக்கு வழங்கிவருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58