வாழ்வாதார அபிவிருத்தி உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவும்: ஆஸி. அமைச்சரிடம் முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் கோரிக்கை

Published By: Devika

06 Apr, 2017 | 11:12 AM
image

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் அவுஸ்திரேலிய அமைச்சர் கொன்சீட்டா ப்யரவான்ரி, வட மாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். இச்சந்திப்பு நேற்று நடைபெற்றது.

அனைத்துலக அபிவிருத்தி மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் கொன்சீட்டா ப்யரவான்ரியின் முதல் இலங்கை விஜயம் இதுவாகும்.

கைதடியிலுள்ள வட மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் வடக்கின் நிலைமைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின், வட பகுதியில் எவ்வாறான அபிவிருத்திகள் மற்றும் முன்னேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பன பற்றியும், மக்களின் வாழ்க்கைக்கான பொறுப்புக் கூறல் போன்ற அம்சங்களை அரசு எவ்வாறு பேணி வருகிறது என்பது பற்றியும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார அபிவிருத்திக்கு அவுஸ்ரேலியா வழங்கிவரும் உதவிகள் குறித்து நன்றி தெரிவித்த முதலமைச்சர் விக்னேஸ்வரன், தொடர்ந்தும் இதுபோன்ற உதவிகளை தமிழ் மக்கள் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இச்சந்திப்பில், வடமாகாண உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் பிரைஸ் ஹட்செசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:01:57
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43