இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் இரண்டாவது இருபதுக்கு-20 போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இன்றைய போட்டியை பொறுத்தவரையில் பங்களாதேஷ் அணிக்கு மிக முக்கிய போட்டியாக அமைந்துள்ளது.

பங்களாதேஷ் அணித்தலைவர் மொர்ட்டஷா  விளையாடும் இறுதி இருபதுக்கு-20 போட்டியாக அமைந்துள்ளது.

இதனால் இந்த போட்டியில் வெற்றிபெற்று மொர்ட்டஷாவுக்கு சிறப்பான பிரியாவடை வழங்க பங்களாதேஷ் அணி எதிர்பார்த்துள்ளது.

இலங்கை அணியை பொறுத்தவரையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை விட இருபதுக்கு-20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இறுதியாக விளையாடிய 5 இருபதுக்கு-20 போட்டிகளில் ஒரு போட்டியில் மாத்திரமே இலங்கை தோல்வியடைந்துள்ளது.

இந்நிலையில் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள குசல் பெரேரா பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது இருபதுக்கு-20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

மறுமுனையில் லசித் மலிங்கவும் அவரது பங்குக்கு சிறப்பான பந்துவீச்சை பதிவுசெய்தார்.

இன்றைய போட்டியில் இலங்கை அணி சார்பில் மாற்றங்கள் எதுவும் இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் இல்லை. இதேவேளை பங்களாதேஷ் அணியில் டஷ்கின் அஹமட்டுக்கு பதிலாக மெஹிதி ஹசன் அவரது முதலாவது இருபதுக்கு-20 போட்டியில் விளையாடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை அணி :

உபுல் தரங்க (அணித் தலைவர்), டில்ஷான் முனவீர, குசல் பெரேரா, லசித் மலிங்க, நுவான் குலசேகர, விகும் சஞ்சய, மிலிந்த சிறிவர்தன, அசேல குணரத்ன, சீகுகே பிரசன்ன, சாமர கபுகெதர, திசர பெரேரா

பங்களாதேஷ் அணி :

தமிம் இக்பால், சௌமிய சர்கார், சபீர் ரஹ்மான், முஸ்தபஹுர் ரஹ்மான், கசிப் அல் ஹசன், மஹமதுல்லா, மொஸ்டாக் ஹுசைன், மெஹிதி ஹசன், மஸ்ரபீ மொர்டஷா (அணித் தலைவர்) டஸ்கின் அஹமட்/ மெஹிதி ஹசன், முஸ்தபிஹுர் ரஹமான்.