(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதிலிருந்து தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முன்னோக்கிய செயற்பாடுகளை எடுங்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் நேரடியாக கோரிக்கை விடுத்த ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்த 13 இற்கு அப்பால் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதியதொரு விடயம் முன்வைக்கப்படுமானால் அதற்கு எமது கட்சி ஆதரவளிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று இன்று பாராளுமன்ற கட்டட தொகுதியில் நடைபெற்றது 

இச்சந்திப்பு குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.