(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

கூட்டு எதிரணியினர் சிறைக்கு செல்ல விருப்பம். அதனால் நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக கூட்டு எதிரணியினரை கைது செய்ய முடியும். ஆனாலும் எனது நண்பனை நான் கைது செய்ய மாட்டேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறிய போது கூட்டு எதிரணி எம்.பி வாசுதேவ நாணயக்கார இன்று சபையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கண்டப்படி திட்டி தீர்த்தார். 

பாராளுமன்றத்தில் இன்று பிரதமர் மீதான கேள்வி நேரத்தின் போது டலஸ் அழகப்பெரும எம்.பி எழுப்பிய வினாவிற்கு பதிலளிக்கும் போதே இந்த சர்ச்சையான நிலைமை ஏற்பட்டது.