(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான ஒப்பந்தம் இதுவரை கைச்சாத்திடப்படவில்லை. அதற்கான வரைவும் தயாரிக்கப்படவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அனைத்து துறையிலும் நாட்டை அடகு வைத்து ஏன் விற்றீர்கள் எனவும் எதிரணியினரை பார்த்து கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் இன்று பிரதமருக்கான கேள்வி நேரத்தின் போது கூட்டு எதிரணி எம்.பி டலஸ் அழகப்பெரும எழுப்பிய கேள்விக்கு பதலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.