சீனாவில் பொறியாளர் ஒருவர் திருமணம் முடிக்க பெண் தேடித் கிடைக்காததால் ரோபோவை மணமுடித்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் பிரபல நிறுவனத்தில் பணிபுரியும் கணினிப் பொறியாளரான ஜெங் ஜியாஜியா (31), யிங்யிங் எனும் பெண் ரோபோவை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமண நிகழ்ச்சியில் இளைஞரின் தாயாரும், நண்பர்களும் கலந்து கொண்டுள்ளனர். 

திருமணமாகாத விரக்தியில் இளைஞர் ஒருவர் ரோபோவை கரம்பிடித்த நிகழ்வு சீன ம‌க்களை வியக்க வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 31 வயது வரையில் தனக்கு விருப்பமான பெண் எதுவும் கிடைக்காததால் கடைசியில் அவர் ரோபோவைத் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

திருமணத்தில் யிங்யிங் ரோபோவின் மீது பாரம்பரிய சிவப்பு துப்பட்டா கொண்டு அலங்கரிக்கப்பட்டு பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. 35 வருடங்களுக்கு பிறகு ரோபோவை மனிதர்கள் மணமுடிப்பது இயல்பாகிவிடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.