இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு-20 போட்டியின் போது கிரிக்கெட் வர்ணனையாளரான ரசல் ஆர்னோல்டுக்கு திருமண கோரிக்கை விடுத்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இலங்கையின் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான ரசல் ஆர்னோல்டுக்கு நேற்றைய தினம் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியின் போது பெண்ணொருவர் தன்னை திருமண செய்யுமாறு பதாதை ஏந்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் ஏந்திய பதாதையை கண்ணுற்ற ரசல் ஆர்னோல்ட் போட்டியின் போது எதுவும் தெரிவிக்காது மௌனம் காத்துவிட்டு, போட்டி முடிவடைந்த பின் அவரின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தனது குடும்ப படத்தினை பதிவேற்றி அப்பெண்ணிற்கு பதிலளித்துள்ளார்.