மாலபே தனியார் வைத்திய கல்லூரியை எந்த சந்தர்ப்பத்திலும் மூட தயாராக இல்லை : ராஜித திட்டவட்டம்!

Published By: Ponmalar

05 Apr, 2017 | 05:49 PM
image

(ஆர்.யசி)

மாலபே தனியார் வைத்திய கல்லூரியான சைட்டம் கல்வியகத்தை அரசாங்கம்  எந்த சந்தர்ப்பத்திலும் மூட தயாராக இல்லை. பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு நேர்த்தியான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரச வைத்திய பல்கலைக்கழகங்களில் தகுதியற்ற மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர் எனவும் அவர் குறிபிட்டார். 

அமைச்சரவை தீர்மானங்களை வெளிப்படுத்தும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 

சைட்டம்  தனியார் வைத்திய கல்வியகம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. எனினும் இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட முறைமையில் சிக்கல்கள் எழுந்தனவே, தரத்தில் எந்த சிக்கலும் இல்லை. இன்றும் தனியார் வைத்திய கல்லூரி மாணவர்களின் தரத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை. தகுதியான மாணவர்கள் இணைத்துக்கொண்டுள்ளமை தொடர்பில் அறிக்கைகளை அவர்கள் வைத்துள்ளனர். எமக்கு எவரது தனிப்பட்ட நலன்களை கருத்தில் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. மாணவர்களின் பக்கம் சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது. உண்மையில் மலாபே தனியார் வைத்திய கல்லூரி மாணவர்களைவிடவும் தகுதி குறைந்த  மாணவர்கள் அரச பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கின்றனர். மூன்று சாதாரண சித்தி பெற்றவர்கள் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கின்றனர். 

மேலும் சைட்டம் தனியார் கற்கையகத்தின் குறைகள் திருத்தப்பட வேண்டும். சில குறைபாடுகள் உள்ளது. அவற்றையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு நேர்த்தியான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சைட்டம் கல்வியகம் மூடப்படாது. அரசாங்கம் அதற்கு தயாராக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58