இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி நேற்று ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது. குறித்த போட்டி தொடர்பில் தற்போது இணையத்தளத்தில் பலராலும் பேசப்பட்டு வருகின்றது.

மொரட்டுவ பல்கலைகழக மாணவர்களால் குறித்த போட்டியின் போது மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டமே இதற்கு காரணமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சைட்டத்திற்கு எதிராக இவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்திற்கு கிரிக்கெட் வர்ணனையாளர் ரோஷன் அபேசிங்கவின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் முட்டாள் தன்மையிற்கு எல்லையில்லையா ? என்று பதிவேற்றியுள்ளார்.