முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்த வாரம் சீனா­வுக்கு மேற்­கொள்­ள­வி­ருந்த பய­ணத்தை திடீ­ரென ஒத்­தி­வைத்­துள்ளார். அவ­ருக்கு எதி­ரா­கவும் அவ­ரது குடும்ப உறுப்­பி­னர்களுக்கு எதி­ரா­கவும் சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பி­லான விசா­ர­ணை­களே இந்த தடைக்கு காரணம் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ சுமார் ஒரு­மா­த­கால பய­ணத்தை மேற்­கொண்டு நாளை சீனா­வுக்கு பய­ண­மாவார் என தெரி­விக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் அவரது பயணம் திடீ­ரென இடை­நி­றுத்­தப்­ப­ட்டுள்­ளது. அவர் மீதும் அவ­ரது குடும்ப உறுப்­பி­னர்கள் மீதும் சுமத்­தப்­பட்­டுள்ள ஊழல் மோச­டிகள் தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணைகள் தற்­போது விசா­ரிக்­கப்­பட்டு வரும் நிலை­யி­லேயே அவ­ரது இந்த பயணம் ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

கண்டி தலதா மாளி­கைக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ அந்த பய­ணத்தின் பின்னர் சீனா பய­ணிப்பார் என தெரி­வித்­தி­ருந்த நிலையில் அது தொடர்பில் வினவியபோது தனது உடல்நிலை சுகவீனம் காரணமாக தனது இந்த பயணத்தை பிற்போட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.