துண்டிக்கப்பட்ட பாதி கழுத்துடன் இரவு முழுவதும் உயிருக்கு போராடிய இளைஞன் : நடந்தது என்ன? (அதிர்ச்சிக் காணொளி)

Published By: Ponmalar

05 Apr, 2017 | 02:02 PM
image

பிரேசிலின் தெற்கு பகுதியில் கடந்த திங்கட்கிழமை இளைஞர் ஒருவரை கொள்கையர்கள் மூவர் கோடூரமாக தாக்கியுள்ளனர். 

குறித்த இளைஞன் பயிற்சி ஒன்றிற்காக பிரேசிலின் தெற்கு பகுதிக்கு சென்றுள்ளார்.

இதன்போது இளைஞரை மூன்று கொள்ளையர்கள் வாளால் தாக்கியதில், குறித்த இளைஞரின் கழுத்தின் பாதி பகுதி வெட்டுப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இளைஞர் இறந்துவிட்டார் என நினைத்து பள்ளத்தில் தள்ளிவிட்டு, அவரிடமிருந்த கையடக்க தொலைபேசிகளை கொள்ளையர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இதன்போது குறித்த இளைஞர் தான் இறந்தது போல் பாவனை செய்து, ஞாயிற்றுக்கிழமை (02) இரவு  இரவு முழுவதும் பாதி தலையை பிடித்தாவாறு இருந்துள்ளார்.

கழுத்தின் திசுக்கள் மற்றும் தோல்கள் என்பன கழுத்தின் பாதி பகுதியில் முழுமையாக வெட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொள்ளையர்கள் மீது உள்ள பயத்தால் இளைஞர் இரவு முழுதும் கடும் வேதனையுடன் அதே இடத்தில் மறைந்திருந்துள்ளார்.

பின்னர் விடிந்ததும் பாதி தலையினை ஒரு கையில் தாங்கியவாரு சுமார் கால் மைல் தூரம் நடந்துசென்று வீதியின் ஓரத்தில் அமர்ந்துள்ளார்.

இதன்போது அப்பகுதிக்கு தீயணைப்பு வாகனமொன்று வந்துள்ளது. இந்நிலையில் அதிலுள்ள வீரர்கள் இளைஞரை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். 

இளைஞர் குறித்த வீரர்களிடம் கொள்ளையர்கள் தன்னை தாக்கி கொலைசெய்ய முயன்றதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் உடனடியாக செயற்பட்டு, அம்பியுலன்ஸை வர வைத்து இளைஞரை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளனாவர் 18 வயதான பெட்ரிக் டி சவுஷா என்ற இளைஞர் என  தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும் துண்டிக்கப்பட்ட பாதி கழுத்துடன் குறித்த இளைஞர் இரவு முழுவதும் தங்கி, கால் மைல் தூரம் நடந்து வந்துள்ளமை அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right