கொழும்புக்கு தெற்கு கடற்பரப்பில் பயணித்த கப்பலில் பரவிய தீயை கட்டுப்படுத்த இலங்கை கடற்படையினர் மற்றும் விமானப்படையினர் தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

குறித்த கப்பலில் பரவிய தீயை கட்டுப்படுத்தம் நடவடிக்கையில் இலங்கை கடற்படைக்கு சொந்தமான இரு அதிவேக தாக்குதல் கப்பல்கள்களும் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான இரு படகுகளும் பயன்படுத்தப்பட்டன.

இந்நிலையில் அவற்றுக்கு உதவியாக இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக உலங்குவானூர்தியொன்றும் தற்போது சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தெற்கு கடற்பரப்பில் பயணித்த பனாமா நாட்டுக்கு சொந்தமானதென சரக்கு கப்பலொன்றில் தீ பரவியிருந்த நிலையில் இலங்கை கடற்படைக்கு சம்பவம் பற்றி தெரிவிக்கப்பட்டதையடுத்து இலங்கை கடற்படையினர் தீயை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.