தன்னுடைய தாய்க்கு சேலை வாங்க சென்ற நபர் இன்னொரு பெண்ணின் சேலையை உருவிய சம்பவம் கடவத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பாடசாலை படித்து முடித்த இளைஞன் நெருங்கியுள்ள புதுவருடப்பிறப்பை முன்னிட்டு ஆடைகள் வாங்குவதற்காக கடவத்த பிரதேசத்திலுள்ள பிரமாண்டமான ஆடை விற்பனை நிலையத்திற்கு சென்றுள்ளார்.

குறித்த விற்பனை நிலையத்தில் பல வர்ணங்களில் விதவிதமான சேலைகள் அடுக்கப்பட்டும் காட்சி பொம்மைக்கு அணியப்பட்டும் இருந்துள்ளது.

தமது தாய்க்கு விருப்பமான சேலையினை தெரிவுச்செய்ய குறித்த இளைஞன் காட்சி பொம்மைக்கு அணியப்பட்டிருந்த அழகிய சேலைகளை தமது கையில் எடுத்து தாயிடம் இது பிடித்துள்ளதா என்று ஒவ்வொன்றாக கேட்டு வந்துள்ளார்.

கடைசியாக இருந்த காட்சி பொம்மையின் சேலையை உருவிய போது “பைத்தியமா உனக்கு” என்று சத்தத்துடன் காட்சி பொம்மை திரும்பியுள்ளது. இதை கண்டதும் குறித்த இளைஞனிற்கு பயத்தினால் முகத்தில் வேர்வையும் வந்துள்ளது.

குறித்த சமயம் அருகில் இருந்த பெண் அது காட்சி பொம்மையல்ல எமது நிலையத்திற்கு ஆடை வாங்க வந்த பெண் என்று இளைஞனிடம் தெரிவித்துள்ளார். பலர் முன்னிலையில் அவமானமடைந்த இளைஞன் குறித்த பெண்ணிடம் என்னை மன்னித்துவிடுங்கள் என்று தெரிவித்து, சேலை வாங்குவதை நிறுத்திவிட்டு அந்த ஆடை நிலையத்தினை விட்டு வெளியேறியுள்ளார்.