சர்க்கரை நோயை பேரியாட்ரிக் சத்திர சிகிச்சை குணப்படுத்துமா..?

Published By: Robert

05 Apr, 2017 | 11:39 AM
image

எம்மில் பலரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு தினமும் மாத்திரைகளைச் சாப்பிட்டு, அதனை கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் உடற்பருமனுக்காக மேற்கொள்ளப்படும் பேரியாட்ரிக் சத்திர சிகிச்சையின் காரணமாக , சிகிச்சைக்கு பின்னர் அவர்களுக்கு சர்க்கரையின் அளவு இயல்பாக இருப்பதாக கண்டறிந்து சொல்லியிருக்கிறார்கள். இதன் பின்னணி என்ன என்பதைப் பார்ப்போம்.

உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் குறைக்க முடியாது என்ற நிலையில் உள்ளவர்களுக்கு அவர்களின் உடல் எடையைகுறைப்பதற்கான சிகிச்சைத்தான் இந்த பேரியாட்ரிக் சத்திர சிகிச்சை. இவ்வகையான சத்திர சிகிச்சையில் நான்கு வகைகள் உள்ளன. அவரவர் உடல் நலம், வயது, உடல் சார்ந்த பிரச்னைகள், ஆணா, பெண்ணா என்பதைப் பொறுத்து, எந்த மாதிரியான பேரியாட்ரிக் சத்திர சிகிச்சை செய்தால் முழுமையான பலன் கிடைக்கும் என்பதை மருத்துவ நிபுணர்கள் தான் தீர்மானிக்கிறார்கள். தெற்காசியர்களின் உடல் வாகிற்கு ஏற்ப Laparascopic sleeve gastrectomy, Gastric bypass என்ற இரண்டு வகையான சத்திர சிகிச்சைகள் பொருத்தமானவை. சம்பந்தப்பட்டவருக்கு, இதில் ஏதாவது ஒன்றையோ அல்லது இரண்டையுமே மேற்கொள்ளலாம். Laparascopic sleeve gastrectomy என்ற சத்திர சிகிச்சையின் மூலம் மொத்தமுள்ள வயிற்றின் அளவில், நான்கில் மூன்று பங்கைக் குறைத்து விடுவார்கள். இதனால் வழக்கமாக சாப்பிடும் உணவின் அளவு குறைந்துவிடும். உடல் எடையை மட்டும் குறைப்பது என்றால், இந்த முறை பொருத்தமானது. Gastric bypass என்ற சத்திர சிகிச்சையின் போது சிறுகுடல் நீளத்தைக் குறைத்து விடுவார்கள். இதனால் உணவில் இருந்து உறிஞ்சப்படும் சத்துகளும் குறைந்துவிடும். இந்த முறையில், உடல் எடை மட்டும் குறைவதில்லை. அத்துடன் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன் நன்றாகச் சுரந்து, போதுமான அளவு இன்சுலின் சுரக்க கணையத்தைத் தூண்டும். இந்த சத்திர சிகிச்சை செய்து கொண்டால், உடல் பருமனால் வரும் பிரச்னைகள் வராது. அதிகப்படியான உடல் எடை, 30 முதல் 50 சதவீதம் குறையும். அடுத்த 6 மாதங்கள் முதல் ஓராண்டிற்குள், 77 சதவீதம் உடல் எடை குறையும். சத்திர சிகிச்சைக்குப்பின், உணவின் அளவு குறைவதால், தேவையான ஊட்டச்சத்துக்களும் குறையும். இதற்கு டொக்டரின் ஆலோசனைப்படி, விற்றமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். லேப்ராஸ்கோபிக் முறையில் செய்வதால், தழும்பு இருக்காது. பக்க விளைவுகளும் இல்லை. சர்க்கரையின் அளவு பழையநிலையில் இயல்பாக இருக்கும்.

Dr.மணிமாறன்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29
news-image

ஒஸ்பெர்ஜர்'ஸ் சிண்ட்ரோம் எனும் குழந்தைகளுக்கான வளர்ச்சி...

2024-04-04 14:17:36
news-image

அதிரோஸ்கிளிரோசிஸ் எனும் ரத்த நாளத் தடிப்பு...

2024-04-03 16:12:32