மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு நேரடியாக தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதியிடம் சொல்லுங்கள் என்ற வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 24 மணித்தியாலங்களில் 3,200 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும்,  இம்முறைப்பாடுகள் அனைத்தும் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இத்திட்டம், கடந்த வெள்ளிக்கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.