உலகின் முன்னணி நிர்மாண சாதனங்கள் உற்பத்தியாளரான கட்டபில்லர் (CAT), இலங்கையில் பொறியியல் தீர்வுகளை வழங்குவதில் முன்னோடியாக திகழும் யுனைட்டட் டிராக்டர் அன்ட் எக்யுப்மன்ட் (பிரைவட்) லிமிட்டெட் (UTE) ஸ்தாபனத்துக்கு 2016 மூன்றாம் காலாண்டுக்காக வெள்ளி விருதை வழங்கியுள்ளது. UTE நிறுவனத்தினால் பின்பற்றப்பட்டிந்த மிகச் சிறந்த சேவைச் சிறப்பு மற்றும் சிறந்த வினைத்திறன் பெறுபேறுகள் போன்றவற்றுக்காக இந்த விருது வழங்கப்பட்டிருந்தது. CAT செயற்பாடுகளுக்கான சீனா-இந்தியா பிராந்தியத்தின் ஒரு பகுதியாக UTE அமைந்துள்ளது. பிராந்தியத்தில் சிறப்பாக தமது பெறுபேறுகளை பதிவு செய்திருந்த இரு விநியோகஸ்த்தர்களில் ஒன்றாக தெரிவாகியிருந்ததுடன், பிராந்தியத்திலிருந்து இந்த விருதுக்காக ஒன்பது விநியோக நிறுவனங்களின் பெறுபேறுகள் மீளாய்வு செய்யப்பட்டிருந்தன.

கட்டபில்லர் நாளாந்த செயற்பாடுகளின் பிரகாரம் காலாண்டு மற்றும் வருடாந்த அடிப்படையில் வழங்கும் சேவைத்தரங்களின் அடிப்படையில் மதிப்பீடுகளை மேற்கொள்கிறது. நிறுவனத்தின் சேவை செயற்பாடுகள் என்பது 16 பிரதான குறிகாட்டிகளின் அடிப்படையில் (முPஐள) மதிப்பீடு செய்யப்படுகிறது. இவை நான்கு பிரதான பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளது, வாடிக்கையாளர் தன்னிறைவு, சேவை வினைத்திறன், சேவை பயன்திறன் மற்றும் இலாபகரத்தன்மை ஆகியன அவையாகும்.

CAT சேவை சிறப்புகள் விருதுகளில் 2014ம் ஆண்டு முதல் UTE பங்குபற்றி வருகிறது. 2015ல் வெண்கல விருதை தனதாக்கியிருந்தது. இரு வருடங்கள் எனும் குறுகிய காலப்பகுதியில், தனது தொடர்ச்சியான செயன்முறைகள் மேம்படுத்தலுக்கான அர்ப்பணிப்பினூடாக வெள்ளி விருதை வெற்றியீட்டுவதற்கு UTE இனால் 2016ன் மூன்றாம் காலாண்டில் இயலுமானதாக அமைந்திருந்தது.

இந்த விருது தொடர்பில் UTE ன் தலைவர் பிரசான் பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “CAT இடமிருந்து உயர்மட்ட மீள்சான்றிதழை பெற்றுக்கொண்டுள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இதனூடாக சிறந்த பெறுபேறுகளை எய்துவதற்கு நாம் காண்பிக்கும் அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. முழு அணியினருடன் ஒன்றிணைந்து, எமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வது குறித்து நாம் நாம் கவனம் செலுத்துவதோடு, எதிர்காலத்தில் தங்க விருதை பெற்றுக்கொள்வதை நோக்கி பயணிக்கிறோம்.” என்றார்.

இந்த விருதுக்கு பங்களிப்பு வழங்கும் ஏனைய 45 இயல்புத்தன்மைகளுடன் விசேட அழுத்தம் நிறுவனத்தின் கலாசாரம் மற்றும் அணியினரின் செயற்பாடுகளில் தங்கியுள்ளன. வழமையான கருத்துக்கள் வழங்கல் மற்றும் மதிப்பீடுகளின் ஊடாக CAT இனால் தேர்வுகள் முன்னெடுக்கப்படுவதுடன், வருடாந்த சதவீதம் என்பது நிறுவனத்தின் புள்ளி பெறலை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.

UTEன் பொருட்கள் உதவி சேவைகள் பொது முகாமையாளர் அரவிந்த ஜயசேகர கருத்துத் தெரிவிக்கையில், “CATன் மதிப்பீடுகளினூடாக, UTE தற்போது வெள்ளி நிலையை எய்தியுள்ளது.  CAT என்பது குழசவரநெ 100 நிறுவனங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. அபிவிருத்தியடைந்துவரும் ஆசிய நாடுகளில் ஒன்றாக திகழும் நாம், சிறிய சந்தையை கொண்டுள்ளோம், இந்த சாதனையை எய்தியுள்ளதையிட்டு நாம் மிகவும் பெருமையடைகிறோம். சர்வதேச தரங்களை எம்மால் பேண முடியும் என்பதை நாம் உறுதி செய்துள்ளதுடன், உலகளாவிய ரீதியில் காணப்படும் 300 விநியோகஸ்த்தர்களிலிருந்து நாட்டுக்கு பெறுமதி சேர்க்கின்றமைக்காக நாம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்” என்றார்.

இந்த சாதனை தொடர்பில் ஜயசேகர தொடர்ந்;து விவரிக்கையில், CAT ன் சர்வதேச மட்ட பயிற்சிகளை UTE அதன் நவீன பயிற்சி நிலையத்தில் முன்னெடுக்கின்றமை, செயன்முறைகளை பின்பற்றுகின்றமை மற்றும் முPஐ களை பொறுப்புகளுடன் தொடர்ச்சியாக பின்பற்றுகின்றமை போன்றவற்றுடன் CAT கலாசாரத்தின் அடிப்படையில் சேவைச் சிறப்பு போன்றன புதிய சான்றளிப்பை பெற்றுக்கொள்வதற்கு உதவியாக அமைந்திருந்தது என்றார்.

 “நாம் சிறந்த சேவை பயிற்சி நிலையத்தை இந்தத்துறையில் கொண்டுள்ளோம். 100 தொழில்நுட்பவியலாளர்களை நாம் கொண்டுள்ளதுடன், 24 மணி நேர சேவையை வழங்கி வருகிறோம். கடினமான சாதனங்களுக்காக நாம் ஆறு கிளைகளை கொண்டுள்ளோம், எமது தொழில்நுட்பவியலாளர்கள் நாடு முழுவதும் சேவைகளை வழங்கும் வகையில் அனுப்பி வைக்கப்படுகின்றனர். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு நாம் சேவைகளை வழங்குகிறோம். எமது வசதிகள், தொழில்நுட்பவியலாளர்கள், ஊழியர்கள் மற்றும் வாகனங்கள் போன்றன சிறந்த நிலையில் காணப்படுவதுடன், தற்போது கட்டபில்லர் மூலமாக வெள்ளி தர நிலை வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது” என ஜயசேகர மேலும் தெரிவித்தார்.

நிறுவனத்திடமிருந்து கிடைத்திருந்த ஊக்குவிப்பு குறித்து ஜயசேகர தெரிவிக்கையில், “UTE ல், பிரதம நிறைவேற்று அதிகாரி முதல் தலைமை அதிகாரி வரை அனைவரும் எமக்கு ஆதரவை வழங்குகின்றனர். அவர்கள் சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். எமது ஊழியர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து, பெறுமதி சேர்ப்பை ஊக்குவித்து வருகின்றனர். UTE ஐ பொறுத்தமட்டில் இது பிரதான விடயமாக அமைந்துள்ளது” என்றார்.