பங்களாதேஷ் அணியின் தலைவர் மஸ்ரபீ முர்தஷா இருபதுக்கு-20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு-20 போட்டி இன்று ஆரம்பமாகிய போது அவர் இதனை அறிவித்துள்ளார்.

நாணய சுழற்சியின் போதே அவர் தனது ஓய்வை அறிவித்து பங்களாதேஷ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் முர்தஷா ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.