திருகோணமலை - கந்தளாய் 94 ஆம் கட்டை பிரதேசத்தில் டீசல் திருட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்திய பெற்றோலிய நிறுவனத்துக்கு சொந்தமான டீசல் கொள்கலனில் திருகோணமலையிலிருந்து கொழும்புக்கு டீசல் கொண்டுவரப்பட்டது.

இதன்போது கந்தளாய் 94 ஆம் கட்டை பகுதியில் வைத்து மூவர்  460 லீற்றர் டீசலை திருடி, அதற்கு பதிலாக டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்துள்ளனர்.

இதன் போது குறித்த இடத்துக்கு பிரவேசித்த பொலிஸார் சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதுடன், இன்று கந்தளாய் நீதிமன்றத்தில் சந்தேக நபர்களை ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.