திருகோணமலை - 3ம் கட்டை பிரதேசத்தில் 8 கிராம் கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Image result for கேரளா கஞ்சாவுடன் நால்வர் கைது

கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே நேற்று இரவு கேரள கஞ்சாவுடன் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

திருகோணமலை உப்புவெளி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படியில் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும், கைதுசெய்யப்பட்ட நால்வரும் திருகோணமலை தேவா நகர், புளியங்குள பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பதுடன், இவர்கள் அனைவரும் 19 தொடக்கம் 22 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த சந்தேகநபர்களை இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.