இலங்கைக்கு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணியின் சிறப்பான ஆட்டம் அனைவரின் கண்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இலங்கைக்கு எதிராக ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களை சமநிலைப்படுத்தி சாதனைப்படைத்த பங்களாதேஷ், இலங்கைக்கு எதிரான இரண்டு இருபது-20 போட்டியில் எவ்வாறு தனது திறமையை வெளிப்படுத்தும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.

இந்நிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இருபது-20 தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் இலங்கை அணி உள்ளது.

இதேவேளை இன்று ஆரம்பமாக உள்ள முதல் இருபது20 போட்டியில் மாலிங்க களமிறங்க உள்ளார்.

பந்து வீச்சில் இவருடைய தேவை இலங்கை அணிக்கு முக்கியமான ஒன்றாகும். இவரின் பந்துவீச்சு இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கியமானதாக அமையும் என கிரிக்கெட் ஆர்வாளர்கள் கருத்துதெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறு கருத்துகள் இவரது பந்துவீச்சை நோக்கி திரும்பியுள்ள போதும், அவரது கவனம் துடுப்பாட்டத்தின் பக்கம் சென்றுள்ளது.

தற்போது இருபது-20 போட்டிக்காக வீரர்கள் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் மாலிங்க துடுப்பாட்ட பயிற்சியில் ஈடுபட்டிருந்த காணொளியை இலங்கை கிரிக்கெட் சபையின் வலைத்தளங்கள் வெளியிட்டுள்ளன.

மலிங்கவின் துடுப்பாட்டத்தை பார்வையிட்ட ரசிகர்கள் மலிங்க துடுப்பாட்டத்திலும்  முன்னேறி வருகின்றார் என வலைத்தளங்களில் கருத்துகளை பதிவுசெய்து வருகின்றனர்.