தனது கடமையை முடித்துவிட்டு வீடு செல்வதற்காக பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த பொலிஸ் அதிகாரியை பதுளை, எல்ல பகுதியில் வைத்து மூன்று நபர்கள் தாக்கியுள்ளனர்.  ஹாலி- எல பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் பொலிஸ் அதிகாரி ஒருவரே, பஸ்ஸின் நடத்துனர் மற்றும் இரு நபர்களால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் அதிகாரி காயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஹப்புத்தளையைச் சேர்ந்த மூன்று சந்தேக நபர்களை, பண்டாரவளை மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் தெரியாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.