நாட்டின் பெரும்பாலான பாகங்களில் இன்று கனமழைபெய்யக்கூடுமென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம், ஊவா மாகாணம் மற்றும் தென் மாகாணங்களில் கன மழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சில பகுதிகளில் 75 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக அந்நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.