தமிழகத்திற்கு சுற்றுலா சென்ற ஜெர்மன் பெண் மீது மூவர் கூட்டு பாலியல் : இந்தியாவில் அதிர்ச்சி சம்பவம்  

03 Apr, 2017 | 05:04 PM
image

ஜெர்மனியிலிருந்து தமிழகத்திற்கு சுற்றுலா சென்ற பெண் ஒருவர் மாமல்லபுரத்தில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மன் நாட்டில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் 15 பேர் தமிழகத்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர். லோமன் ஜெனு (38) என்கிற பெண்ணும் அவர்களுடன் சென்றிருந்தார்.

மாமல்லபுரத்தில் நீண்ட நாட்கள் தங்க வேண்டும் என்கிற எண்ணத்தில் லோமன் ஜேனுவும், அவருடன் வந்திருந்தவர்களும் மாமல்லபுரம் ஒத்தவாடை தெருவில் உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்துள்ளனர்.

அங்கு 15 நாட்களாக அவர்கள், தங்கி இருந்துள்ளார்கள். பல இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்துவிட்டு இரவில் மாமல்லபுரம் வந்து தங்கியுள்ளனர். திருவண்ணாமலை, ராமேஸ்வரம் காஞ்சீபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.

நேற்று பகல் லோமன் ஜெனுவும் ஜெர்மனை சேர்ந்த 2 பெண்களும் மாமல்லபுரம் கடற்கரையில் சூரிய குளியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். இதற்காக மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகே வலது புறத்தில் உள்ள இடத்துக்கு சென்றுள்ளனர். அங்கு சூரியகுளியலில் ஈடுபட சிலர் இடையூறாக இருந்ததால் 3 பேரும் 5 கி.மீ தூரத்தில் பட்டிபுளம் கடற்கரை பகுதிக்கு நடந்து சென்றுள்ளனர். பின்னர் அங்கு சூரியகுளியலில் ஈடுபட்டுள்ளனர்.

சூரிய குளியலில் ஈடுபட்டிருந்த லோமன் ஜெனு தனியாக இருந்ததை அவதானித்த அப்பகுதியில் இருந்த மூன்று பேர் குறித்த பெண்ணை கடத்திச் சென்று கூட்டாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளனர்.

பின்னர் அவர்களிடமிருந்து தப்பி வந்த லோமன் ஜெனு தனது நண்பிகளிடம் இதுகுறித்து கூறி அழுததாக கூறப்படுகிறது. பின்னர் இது பற்றி மாமல்லபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

லோமன் ஜெனுவுக்கு செங்கல்பட்டு, மற்றும் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது வைத்தியசாலைகளில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ அறிக்கைக்குப் பிறகு விசாரணையை தீவிரப்படுத்துவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே ஜெர்மன் தூதரக அதிகாரிகளும் மாமல்லபுரம் சென்று லோமன் ஜெனுவிடம் விசாரணை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட ஜெர்மனி பெண் அந்நாட்டு தூதரக அதிகாரிகளின் விசாரணை முடிந்ததை தொடர்ந்து நாளை நாடு திரும்ப உள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13