இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச் சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, தெரிவுக்குழுவின் தலைவர் சனத் ஜயசூரிய, இலங்கை அணியின் முன்னாள் வீரர் களுவிதாரண, இலங்கை அணியின் பிரதம பயிற்றுவிப்பாளர் கிரஹம் போர்ட் மற்றும் இலங்கை அணி வீரர்கள் கலந்துகொண்டனர்.

இதேவேளை, ஆசிய கிரிக்கெட் கவுன்ஸிலின் தலைவர்  சஹர்யர் எம். கான், பங்களாதேஷ் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் அமைச்சர் நஸ்முல் ஹசன், பங்களாதேஷ் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் நிறைவேற்று அதிகாரி நிசாம் உதின் சௌத்திரி மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.