ஜேர்மன் நாட்டு பெண்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியொன்று டிப்பர் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம்  பதுளை, எல்ல நகரப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில், முச்சக்கர வண்டியில் பயணித்த, சுற்றுலாப் பிரயாணிகளான ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த இரு யுவதிகளும், முச்சக்கர வண்டி சாரதியும் கடும் காயங்களுடன் பதுளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யுவதிகள் இருவரும் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றர்.

வெல்லவாயவிலிருந்து கும்பல்வெல நோக்கி பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் வாகனமும் எல்ல நகரத்தை நோக்கி வந்த முச்சக்கர வண்டியுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.