பங்களாதேஷ் அணியின் தலைவர் மஸ்ரபீ முர்தஷாவுக்கு ஒருநாள் போட்டியொன்றில் விளையாட ஐ.சி.சி. தடை விதித்துள்ளது.

இலங்கை அணிக்கெதிரான இறுதி ஒருநாள் போட்டியின் போது, பந்துவீசுவதற்கு வழங்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொண்டமைக்காகவே குறித்த போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அவரது போட்டிக் கட்டணத்தில் 40 சதவீதம் தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதுடன், ஏனைய வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்தில் 20 சதவீதம் தண்டமாக அறவிடப்பட்டுள்ளது.

இலங்கை அணிக்கெதிரான இறுதி ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 70 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.