அர­சாங்கம் அதன் பற்­று­று­தியில் பின்­வாங்­கு­மாக இருந்தால், சர்­வ­தேச சமூ­கத்­திற்குள் நன்­ம­திப்பை இழக்க நேரிடும் என தெரி­வித்­துள்ள உல­கத்­த­மிழர் பேர­வையின் பேச்­சாளர் சுரேன் சுரேந்­திரன் அவ்­வா­றான சம­யத்தில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ அர­சுக்கு கிடைத்த அதே நிலை­யே இந்த அர­சாங்­கத்­திற்கும் ஏற்­படும் எனவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

தேசிய அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள், ஐ.நா.மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்கள் மற்றும் சம­கால அர­சியல் சமூக நிலை­மைகள் தொடர்­பாக உல­கத்­த­மிழர் பேர­வையின் பேச்­சாளர் சுரேன் சுரேந்­திரன் கேச­ரிக்கு வழங்­கிய விசேட செவ்­வி­யிலேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு, 

Q

 ஆட்­சி­மாற்றம் நடை­பெற்று 18 மாதங்கள் கடந்­தி­ருக்­கின்ற நிலையில் புதிய தேசிய அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களை எவ்­வாறு பார்க் கின்­றீர்கள்?

இந்தக் கேள்­விக்கு நான் ஒரு­வ­ரியில் பதி­ல­

ளிக்க வேண்­டு­மாக இருந்தால் தவிர்க்­க­மு­டி­யாத ஏமாற்றம் அளிக்­கி­றது என்­றுதான் சொல்­ல­வேண்டும். அர­சாங்கம் அளித்­தி­ருந்த வாக்­கு­று­திகள் பல­வற்றை நிறை­வேற்­றா­ததன் கார­ண­மாக பொது­வாக அநே­க­மான இலங்­கை­யர்கள் நம்­பிக்கை இழந்­துள்­ளனர்.

இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­த­பொ­ழுது கடந்த அர­சாங்­கத்தில் நடை­பெற்ற ஊழல் மற்றும் நிர்­வாகச் சீர்­கே­டு­களை சுத்­தப்­ப­டுத்­துவோம் என்றும் பல்­வேறு வழி­க­ளிலும் தங்­க­ளது அதி­கா­ரத்தை துஷ்­பி­ர­யோகம் செய்த அதி­கா­ரி­களை சட்­டத்­தின்முன் நிறுத்தி நீதியை நிலை­நாட்­டுவோம் என்றும் கூறி­யது. துர­திர்ஷ்­ட­வ­ச­மாக, அவ்­வா­றா­ன­வர்­களை சட்­டப்­படி தண்­டிக்க முடி­யாமல் போன­துடன், இவ் அர­சாங்­கத்தின் மீதும் பல்­வேறு வித­மான பாரிய ஊழல் குற்­றச்­சாட்­டுகளும்  நிர்வாக சீர்­கேடு தொடர்­பான குற்­றச்­சாட்­டுக்­களும் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. 

வடக்­கு, -­கி­ழக்கு வாழ் தமிழ் மக்கள் ஜனா­தி­ப­திக்கு பெரு­ம­ளவில் திரண்டு வாக்­க­ளித்து பெரு­வா­ரி­யான வாக்கு வித்­தி­யா­சத்தில் வெற்­றி­பெற வைத்­தனர். அவர்கள் புதிய அர­சாங்கம் அர­சியல் யாப்பில் சீர்­தி­ருத்­தங்­களைச் செய்து பல தசாப்­தங்­க­ளாக நீடித்­தி­ருக்கும் தேசிய இனப்­பி­ரச்­சி­னையைத் தீர்க்கும் என்றும் தங்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளுக்கு சர்­வ­தேச நிய­மங்­க­ளுக்கு அமைய நீதி­கி­டைக்கும் என்றும் அந்த மக்கள் நம்­பினர். 

கடந்த ராஜ­பக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் இடம்­பெற்ற பாலியல் வன்­முறை மற்றும் சித்­தி­ர­வ­தைகள் குறித்து குறிப்­பாக பொலிஸ் மற்றும் இரா­ணு­வத்­தி­னரால் நிகழ்த்­தப்­பட்ட அத்­த­கைய குற்றச் செயல்கள் குறித்து உரி­ய­மு­றையில் தலை­யிட்டு விசா­ர­ணை­களை மேற்­கொண்டு அத்­த­கைய குற்­றச்­சாட்­டு­களை எதிாத்து பெரு­ம­ளவில் வெளிப்­ப­டை­யான கண்­டனக் குரல்­கொ­டுப்­பார்கள் என்ற எதிர்­பார்ப்­புடன் இருந்­தார்கள். 

அப­க­ரிக்­கப்­பட்ட காணிகள் ஒரு­சில மாதங்­க­ளுக்குள் சட்­ட­பூர்வ உரி­மை­யா­ளர்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்­டு­விடும் என்றும், உள்­ளக இடம்­பெ­யர்ந்­த­வர்­களின் மீள்­கு­டி­யேற்­றத்­திற்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­படும் என்றும், நாட்டின் ஏனைய பகு­தி­களில் உள்­ளதைப் போன்று வடக்­கு, -­கி­ழக்­கிலும் இரா­ணு­வத்தின் பிர­சன்னம் குறைக்­கப்­படும் என்றும், அர­சியல் கைதிகள் விடு­விக்­கப்­ப­டு­வார்கள் அல்­லது நீதி­மன்­றத்தில் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்டு விசா­ரிக்­கப்­ப­டு­வார்கள் என்றும் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் விலக்­கிக்­கொள்­ளப்­படும் என்றும் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட பிரதேசங்களுக்கு விசேட முன்­னு­ரிமை அளிக்­கப்­பட்டு அவை­களை மீளக்­கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கேற்ப முத­லீ­டு­களை மேற்­கொண்டு பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியை எட்­டு­வ­தற்கு வழி­வகை செய்­யப்­படும் என்றும் குறைந்­த­பட்சம் இலங்­கையின் ஏனைய பிர­தே­சங்­களைப் போன்­றா­வது ஒரு முன்­னேற்றம் ஏற்­படும் என்றும் தமிழ் மக்கள் நம்­பினர். 

இத்­த­கைய சமூ­கங்­களின் தற்­போ­தைய ஏமாற்­ற­க­ர­மான உள்­ளக்­கி­டக்­கையைப் பிர­தி­ப­லிப்­ப­தா­கவே கடந்த பல மாதங்­களின் செயற்­பா­டுகள் வெளிப்­ப­டுத்­து­கின்­றன.  

எது எப்­ப­டி­யி­ருப்­பினும், ஒட்­டு­மொத்­தத்தில் போகும்­வழி சரி­யா­ன­தா­கவே தெரி­கி­றது.  இந்த அர­சாங்கம் அச்­ச­மின்றி சுதந்­தி­ர­மாக கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கான ஜன­நா­யக வெளியை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது. பொது­வாக அனைத்து சுயா­தீன ஜன­நா­யக நிறு­வ­னங்­களும் அர­சியல் மயப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த 18ஆவது அர­சியல் யாப்புத் திருத்­தத்தை இல்­லாமல் செய்­தி­ருக்­கி­றது. நாட்­டிற்கு ஒரு புதிய அர­சியல் யாப்பை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சி­களை முன்­னெ­டுத்­துள்­ளது. 

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­ய­கத்தின் தீர்­மா­னத்­திற்கு இணை அனு­ச­ரணை வழங்கி ஏற்­றுக்­கொண்­ட­துடன், ஐ.நா.வுடன் நெருக்­க­மாக இணங்கிச் செயற்­ப­டு­வ­திலும் ஏனைய உலக நாடு­க­ளுடன் நெருக்­கத்தைப் பேணு­வ­திலும் குறிப்­பிட்டுச் சொல்­லக்­கூ­டிய அளவில் ஈடு­பட்டு ­வ­ரு­கி­றது. இரா­ணுவம் மற்றும் இதர அரச நிறு­வ­னங்­க­ளினால் சட்­ட­வி­ரோ­த­மாக அப­க­ரிக்­கப்­பட்ட காணிகள் சில­வற்றை விடு­வித்­து­வ­ரு­கி­றது. சில அர­சியல் கைதி­களை விடு­வித்­துள்­ள­துடன், வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு சிவில் சமு­கத்தைச் சேர்ந்­த­வர்கள் ஆளு­நர்­க­ளாக அறி­மு­கப்­ப­டுத்­தி­வ­ரு­கி­றது.

Q

ஆட்சி மாற்­றத்தின் பின்னர் இலங்கை அர சாங்கம் குறித்து உல­கத்­த­மிழர் பேரவை தனது நிலைப்­பாட்டை மாற்­றி­ய­மைக்கு காரணம் என்ன? 

உலகத் தமிழர் பேர­வை­யி­ன­ரா­கிய நாம் ஆட்சி மாற்­றத்தின் பின்னர் எமது நிலைப்­பாட்டை மாற்­றிக்­கொள்­ள­வில்லை. இலங்­கையின் ஆட்சி மாற்­றத்தில் நாமும் ஒரு சிறிய பங்­காற்­றி­யுள்ளோம் என்று நினைக்­கிறோம். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் உலகத் தமிழர் பேரவை மட்­டுமே ராஜ­பக்­சவை வீழ்த்­து­வ­தற்கு அதிக அளவில் தமது வாக்­கு­ரி­மையைப் பயன்­ப­டுத்­து­மாறு எமது மக்­க­ளுக்கு அறை­கூவல் விடுத்­தது. 

இணைந்த மற்றும் ஆக்­க­பூர்­வ­மான செயற்­பாட்டின் மூலம் எதிர்­கா­லத்தில் நிக­ழக்­கூ­டிய மாற்­றங்­களில் செல்­வாக்கு செலுத்த முடியும் என்று உலகத் தமிழர் பேரவை நம்­பிக்கை கொண்­டுள்­ளது. நாம் வெளியு­றவு அமைச்சர் மற்றும் அர­சாங்க உத்­தி­யோ­கத்­த­ர்­களை பல­முறை சந்­தித்­துள்­ள­துடன் இரண்­டு­முறை ஜனா­தி­ப­தி­யையும் சந்­தித்­துள்ளோம். அர­சாங்­கத்தின் முற்­போக்­கான நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஊக்­க­ம­ளிக்­கின்ற அதே­வேளை அர­சாங்­கத்தின் ஒடுக்­கு­முறை அல்­லது பிற்­போக்­குத்­த­ன­மான நட­வ­டிக்­கை­களை பகி­ரங்­க­மாக விமர்­சிப்­ப­தி­லி­ருந்து உலகத் தமிழர் பேரவை வெட்­கப்­பட்டு ஒதுங்­கி­யி­ருக்­காது.

Q

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர வையின் அமெ­ரிக்­கா­வினால் கொண்­டு­வ ரப்­பட்டு தேசிய அர­சாங்­கமும் இணை அனு­ச­ரணை வழங்கி நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையின் பரிந்­து ரைகள் உங்­க­ளது மதிப்­பீட்டின் பிர­காரம் எவ்­வ­ளவு தூரம் நடை­மு­றைப்­ப­­டுத்­தப்­பட்­டுள்­ளன என கரு­து கின்­றீர்கள்?

செயற்­பா­டுகள் மிகவும் மந்­த­க­தியில் நடை­பெ­று­வ­துடன், குறை­வா­கவும் உள்­ளன. மனித உரி­மைகள் ஆணை­யாளர் தமது அறிக்­கையில் கவலை அளிக்­கும்­வி­தத்தில் மெது­வா­னது என்று குறிப்­பிட்­டுள்ளார். இலங்கை அர­சாங்கம் ஐ.நா. தீர்­மா­னத்தின் A/HRC/30/L.29 ஆவது பிரிவை நடை­மு­றைப்­ப­டுத்தும் செயற்­பாடு இன்­ன மும் தொடர்­கி­றது. எனவே, தீர்­மா­னத்தை முழு­மை­யாக நிறை­வேற்­றும்­வரை, இலங் கை மனித உரிமை ஆணை­ய­கத்தின் கண்­கா­ணிப்பில் இருப்­பது அவ­சி­ய­மாகும். முறை ­யான கண்­கா­ணிப்பையும் அவ­தா­னிப்பையும் பிறிதொரு தீர்­மா­னத்தின் வழி­யா­கத்தான் மேற்­கொள்ள முடியும் என்­ப­தால் தான் அதனை ஆத­ரித்தோம்.

அர­சாங்கம் தீர்­மா­னத்­திற்கு இணை அனு­ச­ரணை வழங்­கியும் நாட்டு மக்­களின் சார்­பாக தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­வ­தற்குப் பொறுப்­பா­ன­தா­கவும் திகழ்­கி­றது. இலங்கை தொடர்ந்தும் 30/1 தீர்­மா­னத்தை நிலு­வை­யின்றி தவ­றாமல் நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­ய­கத்தின் 2015ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதக் கூட்­டத்தில் கலந்­து­கொண்டு வெளிவி­வ­கார அமைச்சர் ஆற்­றிய உரையை இங்கு நினை­வு­கூர்­வது பொருத்­த­மாக இருக்கும் என்று நினைக்­கிறேன். அவர் அங்கு உரை­யாற்­று­கையில், கடந்­த­கால நிறை­வேற்­றப்­ப­டாத வாக்­கு­று­தி­க­ளையும், அனு­ப­வங்­க­ளையும் குத்­துக்­க­ர­ணங்­க­ளையும் அடிப்­ப­டை­யாகக் கொண்டு எங்­களை எடை­போ­டா­தீர்கள். கன­வான்­களே, சீமாட்­டி­களே, என்­னு­டைய தாழ்­மை­யான வேண்­டுகோள் என்­ன­வென்றால், முன்­னேற்­றத்­திற்குத் தேவை­யான வேகத்தை உரு­வாக்­கு­வ­தற்கும் முற்­போக்­காக முன்­னேறிச் செல்­வ­தற்கும், அர்த்தம் பொதிந்த நிலை­மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கைளை மேற்­கொண்டு ஒரு புதிய இலங்­கையை உரு­வாக்­கு­வ­தற்கும் எங்­களை நம்­புங்கள், நாம் ஒன்­றி­ணைந்து பணி­யாற்­று­வ­தற்­காக எங்­க­ளுடன் கைகோ­ருங்கள் எனக் கோரி­யி­ருந்தார்.

செய­லாற்­றலில் ஏற்­பட்ட பின்­ன­டை­விற்கு இலங்கை அர­சாங்கம் நாட்டின் அர­சியல் யதார்த்த நிலையை ஒரு கார­ண­மாக முன்­வைக்­கலாம். இந்த தீர்­மானம் நிறை­வேற்­று­வதில் தாம­தித்­த­மைக்கு ராஜ­பக்­ ஷவையும் கூட்டு எதி­ர­ணி­யி­ன­ரையும் மட்­டுமே கார­ணி­யாக  முன்­வைப்­பது ஒட்­டு­மொத்­தத்தில் பிழை­யான கற்­பி­த­மாகும். பாரா­ளு­மன்­றத்தின் மொத்த உறுப்­பி­னர்­களில் கூட்டு எதி­ர­ணி­யி­னர் வெறும் 51 உறுப்­பி­னர்கள் மட்­டுமே. உண்­மையில் கூட்டு எதி­ர­ணி­யி­னரால் இது­வரை காலமும் அர­சாங்­கத்தை அச்­சு­றுத்­தக்­கூ­டிய வகையில் எத்­த­கைய செயற்­பா­டு­க­ளையும் வெற்­றி­க­ர­மாக நிறை­வேற்ற முடி­ய­வில்லை.

இலங்கை அர­சாங்கம் ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­ய­கத்தின் 2015ஆம் ஆண்டின் ஒக்­டோபர் மாத தீர்­மா­னத்­திற்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­ய­போது நாம் அதனை ஊக்­கு­வித்­தி­ருந்தோம். அத்­தீர்­மானம் யுத்­தத்­தின்­போது இரு­த­ரப்­பி­னரும் பாரிய குற்­றச்­செ­யல்­களில் ஈடு­பட்­டி­ருந்­த­மையை ஏற்­றுக்­கொண்­டி­ருந்­தது. அது இலங்­கையின் மனித உரி­மைகள் விவ­கா­ரத்தில் பாரிய திருப்­பு­மு­னை­யாக அமைந்­தி­ருந்­தது. மே 18 அன்று தமது உற­வு­களை நினைவு கூரு­வ­தற்­கான  வாய்ப்பு அளிக்­கப்­பட்­டி­ருந்­த­மையை நாம் வர­வேற்­றி­ருந்தோம்.

அத்­துடன் மனித உரி­மைகள் பொறி­மு­றையில் குறிப்­பி­டத்­தக்க அளவில் ஐ.நா.வின் முக­வ­ரங்­கங்­க­ளுடன் இணைந்து பணி­யாற்­றி­ய­தையும் வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான அலு­வ­ல­கத்தை நிறு­வு­வ­தற்­கான முன்­னெ­டுப்பில் ஈடு­பட்டு 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் பாரா­ளு­மன்­றத்தில் சட்­ட­மூலம் கொண்­டு­வ­ரப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­ட­தையும் நாம் வர­வேற்­றி­ருந்தோம். ஆனால் ஏழு­மா­தங்கள் கடந்த பின்­னரும் இன்­று­வரை அது வர்த்­த­மா­னியில் வெளியி­டப்­ப­ட­வில்லை. வர்த்­த­மா­னியில் வெளியி­டப்­ப­டு­வ­தா­னது நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு வழி­வ­குக்­கின்­றது.

உலகத் தமிழர் பேரவை ஆலோ­சனை செய­ல­ணி­யினால் ஜன­வரி 3, 2017அன்று வெளியி­டப்­பட்ட நல்­லி­ணக்க பொறி­மு­றைக்­கான பரிந்­து­ரை­களை முறைப்­படி வர­வேற்­றி­ருந்­தது.

இருப்­பினும் பொறுப்­புக்­கூறல் பொறி­முறை விட­யத்தில் மிகக் குறைந்த அளவே நடை­பெற்­றி­ருப்­பதை கண்­கூ­டாகக் காண­மு­டி­கி­றது. உலகத் தமிழர் பேரவை நெருக்­கடி நிலையை தணிப்­ப­தற்­கான நிலை­மா­று­கால நீதிப்­பொ­றி­மு­றை­களை முன்­னெ­டுத்துச் செல்­வதில் அர­சாங்­கத் தின் முயற்­சிகள் போது­மா­ன­தாக இல்­லா­த­தை­யிட்டு ஏமாற்­ற­ம­டைந்­துள்­ளது. 

பாது­காப்­புத்­துறை மறு­சீ­ர­மைப்பு, சாட்­சி­களைப் பாது­காப்­ப­தற்­கான சட்ட ஏற்­பாடு உள்­ளிட்ட  நிறு­வன சீர்­தி­ருத்­தங்கள் அத்­தி­யா­வ­சி­ய­மா­னவை. ஆனால் தற்­போ­தைய சூழலில்  அவை தேவைப்­ப­டு­வ­தை­விட மிகவும் குறை­வா­கவே உள்­ளன. மேலும்  பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளு­டனும் அவர்­க­ளது குடும்­பத்­தி­ன­ரு­டனும் உண்­மையைக் கண்­ட­றி­வ­தற்கும் நீதி­வ­ழங்­கு­வ­தற்­கு­மான செயற்­பா­டு­களின் ஒவ்­வொரு நிலை­யிலும் இத­ய­சுத்­தி­யு­ட­னான கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்டு முக்­கி­ய­மான நட­வ­டிக்­கை­களை கடைப்­பி­டிப்­ப­தற்கு அர­சாங்கம் தாம­த­மின்றி முன்­வ­ர வேண்டும்.

யுத்தக் குற்­றங்கள் மற்றும் மானு­டத்­திற்கு எதி­ரான குற்றச் செயல்­களில் இரண்டு தரப்­பி­னரும் ஏரா­ள­மாகக் குற்­ற­மி­ழைத்­தி­ருப்­ப­தாக முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ளன. இவை தற்­போ­தைய நீதிப்­பொ­றி­மு­றையில் குற்­றங்­க­ளாக அடை­யாளம் காணப்­ப­ட­வில்லை. இவை குற்­றங்கள் என அடை­யாளம் காணும் வகையில் பாரா­ளு­மன்­றத்தில் சட்­ட­மி­யற்­றப்­ப­ட­வேண்டும். இவை இன்­னமும் ஆரம்­பிக்­கப்­ப­டக்­கூட இல்லை. நஷ்­ட­ஈடு வழங்­கு­வது குறித்து இது­வரை கலந்­து­ரை­யா­டல்­கள் ­கூட ஆரம்­பிக்­கப்­ப­ட­வில்லை. அல்­லது குறைந்த அளவில் நடை­பெற்­றுள்­ளது என்­பதும் முக்­கி­ய­மா­னது. 

Q

இரண்டு வருட கால அவ­கா­சத்தில் அர சாங்கம் தீர்­மா­னத்தை முழு­மை­யாக நடை மு­றைப்­ப­டுத்தும் எனக் கரு­து­கின்­றீர்­களா?

கடந்த பதி­னெட்டு மாத­கால அனு­ப­வத்தைச் சீர்­தூக்கிப் பார்க்­கையில், அர­சாங்கம் 30/1 தீர்­மா­னத்தில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள அனைத்து கோரிக்­கை­க­ளையும் நிறை­வேற்றும் என்று நம்பி நான் என்­னிடம் உள்ள கடைசி நாண­யத்­தையும் பந்­த­ய­மாக வைக்க விரும்­ப­வில்லை. இருப்­பினும், தற்­போது புதி­தாக உரு­வாக்­கப்­பட்­டுள்ள 34/1 இன் தீர்­மா­னத்­திற்கும் அர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்­கி­யதன் மூலம், மீண்டும் ஒரு­முறை அது சர்­வ­தே­ச­ரீ­தியில் பற்­று­று­தி­யுடன் செயற்­ப­ட­வேண்டும்.

இந்த இடத்தில் நான் மீண்டும் 2015ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் இலங்­கையின் வெளிவி­வ­கார அமைச்­சரின் உரையை நினை­வு­ப­டுத்த விரும்­பு­கிறேன். ஆகவே அர­சாங்கம் அதன் பற்­று­று­தியில் பின்­வாங்­கு­மாக இருந்தால், அது சர்­வ­தேச சமூ­கத்­திற்குள் நன்­ம­திப்பை இழக்க நேரிடும் என்­ப­துடன் அதே சம­யத்தில் ராஜ­பக் ஷ அர­சுக்கு கிடைத்த அதே நிலையை இந்த அர­சாங்­கத்­திற்கும் ஏற்­ப­டுத்தும்.

Q

கலப்பு பொறி­மு­றையை அர­சாங்கம் தொடர்

ச்­சி­யாக நிரா­க­ரித்து வரு­கின்ற நிலையில் இரண்டு வருட கால அவ­காசம் வழங்கப்பட்ட பின் னரும் இந்­தப்­ப­ரிந்­து­ரைகள் நடை­முறைப்­ப­டுத்­ த­ப்ப­டா­தி­ருந்தால் நீதியைப் பெற்­றுக்கொடுப்­ப­தற் காக எவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை முன்னெ­டுப் பீர்கள்?

இலங்­கைக்கு ஆத­ர­வாகச் செயற்­பட்ட நாடுகள், அர­சாங்­கங்கள், ஐநா, ஐரோப்­பிய ஒன்­றியம் மற்றும் பொது­ந­ல­வாய நாடுகள் போன்ற சர்­வ­தேச நிறு­வ­னங்களிடம் இலங்கை அர­சாங்கம் 30/1 மற்றும் 34/1 ஆகிய தீர்­மா­னங்­க­ளுக்கு இணை­ அ­னு­ச­ரணை வழங்­கி­யதன் மூலம் தான் ஏற்­றுக்­கொண்ட பொறுப்பை நிறை­வேற்ற எடுத்­துக்­கூ­றும்­படி நாம் தொடர்ந்தும் பிர­சாரம் செய்வோம். 

அத்­துடன் அடுத்த சில மாதங்­களில் ஜி.எஸ்.பி. பிளஸ் போன்ற பொரு­ளா­தார உத­விகள் வழங்­கப்­பட்டால் அவற்றை மீளப்­பெ­றும்­படி கோருவோம். ஒரு அமைப்பு என்ற வகையில் அந்­தந்த காலப்­ப­கு­தியில் மேற்­கொள்­ளப்­படும் நட­வ­டிக்­கை­களை மதிப்­பிட்டு தக­வல்­களின் அடிப்­ப­டையில் எமது அடுத்த கட்ட பணி­களை உரு­வாக்­குவோம். 

Q

சமஷ்டிக் கோரிக்கை, வடக்கு, கிழக்கு இணைப்பு ஆகி­ய­வற்றை நிரா­க­ரித்­துள்ள தேசிய அர­சாங்கம் புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக தமி­ழர்­க­ளுக்கு நியா­ய­மான தீர்வை வழங்கும் என கரு­து­கின்­றீர்­களா?

எதிர்­கால சந்­த­தி­யினர் பாது­காப்­பு­டனும் அமை­தியும் சமா­தா­ன­மு­மான இலங்­கையில் வெற்­றி­க­ர­மாக வாழ­வேண்­டு­மானால் புதிய அர­சியல் யாப்­பினை அமுல்­ப­டுத்­து­வது  மட்­டுமே  நம்­பிக்கை அளிக்­கக்­கூ­டிய ஒரே வழி­யாகும். மித­வாத கண்­ணோட்­ட­முள்ள தலை­வர்­களை உள்­ள­டக்­கிய ஒரு ஐக்­கிய அர­சாங்கம் பத­வியில் இருப்­பதும் மிகவும் பொருத்­த­மான தமிழ் தலைமை பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்­சி­யாக இருப்­பதும் கடந்த இரண்டு பாரிய தேர்­தல்­க­ளிலும் இரண்டு சமூ­கங்­க­ளி­னதும் தீவி­ர­வாத சக்­தி­களை மக்கள் பெருந்­தி­ர­ளாக ஏற்க மறுத்­தி­ருப்­ப­து­மான இன்­றைய அர­சியல் சூழலில், ஒரு புதிய அர­சியல் யாப்பை வெற்­றி­க­ர­மாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு இதுவே சரி­யான தரு­ண­மாகத் தெரி­கி­றது. ஆகவே நாம் மிகவும் நம்­பிக்­கை­யுடன் இருக்­கிறோம்.

Q

வடக்கு, கிழக்கில் இரா­ணு­வப்­பி­ர­சன்னம், காண­ம­லாக்­கப்­பட்­டோ­ருக்­கான விடயம், அர­சியல் கைதிகள் விட­யத்தில் எவ்­வி­த­மான முன் னேற்­றங்­களும் ஏற்­பட்­டி­ருக்­காத நிலையில் அடுத்த கட்­ட­மாக எவ்­வா­றான முன்­னெ­டுப்­புக்­களை மேற் கொள்ள முடியும் என கரு­து­கின்­றீர்கள்?

ஒரு நிறு­வனம் என்ற வகையில் உலகத் தமிழர் பேரவை அர­சாங்கத்தின் செய­லாற்­றல்­களில் தொடர்ச்­சி­யாக ஏற்­படும்  பின்­ன­டை­வு­களை தொடர்ந்தும் அம்­ப­லப்­ப­டுத்தும். சாத்­தி­யப்­படும் போதெல்லாம் நாம் எமது ஏமாற்­றங்­களை அர­சாங்­கத்­திற்கு தொடர்ந்தும் தெரி­விப்போம். இலங்கை தனது மக்­களின் குறை­களை நிவர்த்தி செய்­யாத வரையில், இலங்­கையின் நன்­ம­திப்பு சர்­வ­தேச அரங்கில் கேள்­விக்­குள்­ளாக்­கப்­ப­டு­வ­துடன் வெளிநாட்டு மூல­த­னங்கள் மற்றும் முன்­னு­ரிமை வழங்கி கவ­னிக்­கப்­படும் விட­யங்கள் எதிர்­கா­லத்தில் இல்­லாமல் போய்­விடும்.

Q

எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் அர­சியல் நகர் வுகள் சரி­யான பாதையில் செல்­கின்­ற­தெனக் கரு து­கின்­றீர்­களா?

இரண்டு பாரிய தேர்­தல்­க­ளிலும் இரண்டு சமூ­கங்­க­ளையும் சேர்ந்த தீவி­ர­வாதப் போக்­கு­டை­ய­வர்­களை மக்கள் திரண்­டெ­ழுந்து நிராக­ரித்து மிகவும் பொருத்­த­மான தமிழ் தலைமை பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்­சி­யாக உள்­ளமை இலங்கை வர­லாற்றில் மிகவும் சிறப்­பான கால­மாகும். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தனது தேர்­தல் ­தொ­கு­தி­களில் அதி­க­ரித்­துள்ள ஆத­ரவின் மூலம் அது தனது நன்­ம­திப்பை இலங்­கையில் நிரூ­பித்­தது மட்­டு­மன்றி, சர்­வ­தேச சமூ­கத்­தி­னுள்ளும் தனது அர­சியல் தந்­தி­ரத்தின் மூலம் பெரு­வா­ரி­யான நன்­ம­திப்பைப் பெற்­றுள்­ளது. 

Q

கூட்­ட­மைப்­பினுள் சில முரண்­பா­டான கருத் தியல் நிலை­மைகள் அண்­மைக்­கா­ல­மாக காணப்­ப­டு­கின்­றன. அக்­கட்­டமைப்பை வலுப்­ப­டுத்­து வதில் உங்­களின் வகி­பாகம் எவ்­வா­றுள்­ளது?

கட்­சி­க­ளுக்­கி­டையில் அவ்­வப்­போது மனக்­க­சப்­புக்கள் வரு­வது இயல்பு. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு என்­பதை பல கட்­சி­களைக் கொண்ட அமைப்­பாகும். ஆகவே குறிப்­பிட்ட சில பிரச்­சி­னை­களில் ஒத்­துப்­போ­காத நிலை என்­பது ஒரு ஜன­நா­யக குழுச் செயற்­பாட்டில் ஆரோக்­கி­ய­மான விட­ய­மா­கவே இருக்க வேண்டும். இவை­யெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் உட்­கட்சிப் பிரச்­சினைகள் இவற்றை வெளிச்­சக்­தி­களின் துணை­யின்றி காத்­தி­ர­மாகக் கையாளும் வல்­லமை அதன் தலை­மைக்கு இருக்­கி­றது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் ஏதேனும் தவ­றான புரிந்­து­ணர்­வுகள் எஞ்­சி­யி­ருக்­கு­மானால் அத­னையும் பொருத்­த­மான முறையில் தீர்த்­துக்­கொண்டு எதிர்­கால ஜன­நா­யக சோத­னை­களில் வெற்­றி­க­ர­மாக முன்­னேறிச் செல்லும் ஆற்றல் அதற்கு இருக்­கின்­றது என்­பதில் நான் மிகவும் நம்­பிக்­கை­யுடன் உள்ளேன்.