(ஆர்.யசி)

சர்வதேச விசாரணைகள் தான் தமிழர் தரப்பினருக்கு அவசியம் என்றால் கடந்த காலத்தில் விடுவிக்கப்பட்ட 12 ஆயிரம் புலிகளை கைதுசெய்துதண்டிக்க வேண்டும். இதற்கு தமிழர் தரப்பு தயார் என்றால் நாமும் விசாரணைகளை முன்னெடுக்க தயார். பக்கசார்பான எந்தவொரு விசாரணையும் அரசாங்கம் ஏற்காது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். 

சர்வதேச விசாரணைகள் மற்றும் புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் தமது நிலைப்பட்டை தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.