(பா.ருத்ரகுமார்)

இந்து சமுத்திரத்தில் இலங்கை தனித்துவமான பாத்திரத்தை ஏற்கவேண்டுமெனவும் சிசெல்ஸ், மொரிசியஸ், மாலைத்தீவு உட்பட்ட தீவுகளுக்கும் இலங்கையின் பொருளாதார ஆதிக்கம் தற்போது அவசியமான தேவையாகவுள்ளதாகவும் முன்னாள் மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் நசீட் தெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திரத்தில் இலங்கையின் தேவை மற்றும் மாலைத்தீவின் பொருளாதார ஆக்கிரமிப்புக்கள் தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.