பெண்ணொருவர் பேஸ் புக்கில் பதிந்த ஒரு பொய்யான பதிவிற்காக இலங்கை பெறுமதிப்படி சுமார் 761 இலட்சம் ரூபாய் தண்டப்பணமாக செலுத்துவதற்கு, நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியிலுள்ள பெண்ணொருவர்,  தன் நண்பர் குறித்து பொய்யான பேஸ்புக் பதிவொன்றை செய்த குற்றத்திற்காக 500,000 டொலர்கள் அபராதம் செலுத்த வேண்டுமென, வடக்கு கரோலினா நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ஜாக்குலின் ஹாம்மோண்ட் என்ற பெண்ணே, கடந்த 2015 ஆம் ஆண்டு டுவெயின் டயல் என்பவரின் மகன், அவர் மது அருந்திய நிலையில் கொலை செய்யப்பட்டதாக, பேஸ்புக் பதிவில் தெரிவித்திதுள்ளார். ஆனால் உண்மையில் டுவெயின் டயலின் மகன் வேறொரு நபரின் துப்பாக்கி தாக்குதலுக்கு இலக்காகி இறந்துள்ளார்.

இந்நிலையில்  ஹாம்மோண்டின் பதிவால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், அவர் தொடர்ச்சியாகவே பொய்யான பதிவுகளை பரப்பி வருவதாக டுவெயின் டயல் அளித்த முறைப்பாட்டின் பிரகாரம், அவரின் பேஸ்புக் கணக்கு பற்றி விசாரணைகளை செய்ததோடு, கொல்லப்பட்டதாக கூறப்படும் சிறுவனின் பிரேத பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்து, ஹாம்மோண்ட் குற்றம் புரிந்துள்ளதாக நீதிபதி தீர்ப்பளித்து தண்டப்பணத்தொகையை செலுத்தும்படி உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்கா ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.