பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இலங்கை அணி 70 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரை 1-1 என சமப்படுத்தியுள்ளது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 280 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் குசால் மெண்டிஸ் 54 ஓட்டங்களையும்,  திசர பெரேரா 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் மஸ்ரபீ முர்தசா 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் 281 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 44.3 ஓவர்களில் 210 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

பங்களாதேஷ் அணிசார்பில்  சகிப் ஹல் ஹசன் 54 ஓட்டங்களையும், மெஹிடி ஹாசன் மிராஷ் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் நுவான் குலசேகர 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக திசர பெரேரா தெரிவுசெய்யப்பட்டதுடன், தொடரின் சிறப்பாட்டக்காரராக குசால் மெண்டிஸ் தெரிவுசெய்யப்பட்டார்.