(எம்.சி.நஜிமுதீன்)

கூட்டு எதிர்க்கட்சியின் “அரச சொத்துகளைப் பாதுகாக்கும் அமைப்பு” ஏற்பாடு செய்துள்ள அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மாநாடு நாளை மு.ப. 9.30 மணிக்கு தெஹிவளையிலுள்ள ஜயசிங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்துள்ள மாநாட்டில் தேசிய வளப்பாதுகாப்பு தொடர்பான துறைசார்ந்தோர் உட்பட அதிகளவானோர் கலந்துகொள்ளவுள்ளனர். அதன்போது தேசிய வளங்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் உணர்த்தப்படுவதுடன், அரசாங்கம் தற்போது தேசிய வளங்களை சர்வதேச மயப்படுத்துவதுடன் தனியாருக்கு விற்பனை செய்வதனை தடுத்து நிறுத்துவதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் பற்றி மிகுந்த அவதானம் செலுத்தப்படவுள்ளதாக கூட்டு எதிர்கட்சியின் “அரச சொத்துகளைப் பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டளர் தெரிவித்தார்.