நியூஸிலாந்தில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இலங்கையர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

தேசிய நெடுஞ்சாலை இலக்கம் 1ல் நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் கொல்லப்பட்டவர் காமினி வித்தானகே (56) என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதாலேயே இவ்விபத்து ஏற்பட்டதாகவும், இதில் ஒரு காரைச் செலுத்திவந்த காமினி சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.