இன்று விஹாரை ஒன்றை அமைக்க முடி­யாத சூழல் ஏற்­பட்­டுள்­ளது : மஹிந்த ராஜ­பக்ஷ 

Published By: Priyatharshan

01 Apr, 2017 | 10:59 AM
image

சோழ மன்­னர்கள் இலங்­கையை ஆக்­கி­ர­மித்த கால­கட்­டத்தில் பௌத்த தர்­மத்தை அழிக்க முனைந்­தனர். ஆனால் எமது சந்­த­தி­யினர் தர்­மத்தை பாது­காத்­தனர் என தெரி­வித்­துள்ள முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­ணாகல் மாவட்ட எம்.பி.யுமான மஹிந்த ராஜபக்ஷ இன்று விஹா­ரையோ புத்தர் சிலையோ அமைக்க முடி­யாத நிலை தோன்­றி­யுள்­ளது  என்றும் குறிப்­பிட்­டுள்ளார்.

 காரணம்  அதற்கு சீமெந்து எங்­கி­ருந்து கிடைத்­தது என விசா­ரிக்கும் ஆட்­சி­யா­ளர்கள் நாட்டில் உள்­ளனர். இவர்­களும் தர்­மத்­திற்கு எதி­ரா­கவே செயற்­ப­டு­கி­றார்கள் என்றும் மஹிந்த ராஜபக் ஷ  கூறி­யுள்ளார். 

பெலி­யத்­தையில் அண்­மையில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் உரை­யாற்­று­கை­யி­லேயே   மஹிந்த ராஜபக் ஷ எம்.பி. இவ்­வாறு தெரி­வித்தார். அவர் இங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் 

இலங்கை இன்று போதை பொருட்­களை விநி­யோ­கிக்கும் மத்­திய நிலை­ய­மாக மாறி­யுள்­ளது. போதைப் பொருட்கள் கப்­பல்­க­ளி­லேயே வரு­கின்­றன.

இன்று இலங்­கையில் ஒரு புத்தர் சிலையை அமைக்க முடி­ய­வில்லை. விஹா­ரையை அமைக்க முடி­ய­வில்லை. அப்­படி அமைத்தால் அதற்கு சீமெந்து எங்­கி­ருந்து கிடைத்­தது என ரக­சிய பொலிஸார் விசா­ரிக்கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. அர­சாங்­கமே இதனை மேற்­கொள்­கின்­றது. 

அர­சி­யல்­வா­தி­களை அடக்கு முறைக்கு உள்­ளாக்க முடியும். ஆனால் மதத்­தையும் தர்­மத்­தையும் விஹா­ரை­யையும் அடக்கு முறைக்கு உள்­ளாக்க முடி­யாது. அவ்­வாறு அடக்கு முறைக்கு உள்­ளாக்க முனைந்தால் அதற்கு இட­ம­ளிக்க மாட்டோம்.

அண்­மையில் அரச மர­மொன்றை வெட்­டி ­சாய்க்க முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. ஆனால் அதனை வழி­ப­்டு­ப­வோரின் எதிர்ப்பால் அம்­மு­யற்சி கைவி­டப்­பட்­டது.

சோழ மன்­னர்கள் இலங்­கையை ஆக்­கி­ர­மித்த காலத்தில் பௌத்த தர்­மத்தை அழிக்க முனைந்­தனர். ஆனால் எம்­ம­வர்கள் தர்­மத்தை பாது­காத்­துள்­ளனர்.எமது பிள்­ளைகள் நல்ல வழியில் வாழ வேண்டும். அதற்கு எமது தர்மம் பாது­காக்­கப்­பட வேண்டும்.

பழி­வாங்கல்  இன்­றைய ஆட்­சி­யா­ளர்­களின் கொள்­கை­யா­கி­யுள்­ளது.நாட்டில் போதைப் பொருட்கள் அதிகரித்துள்ளன. குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. 

அண்மையில் சிறைக் கைதிகள் கொல்லப்பட்டார்கள். இவ்வாறு நாட்டின் பாதுகாப்பும் சீரழிந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59