அகில இலங்கை பாட­சா­லைகள் அணிகள் மோதிய மேசைப்­பந்­தாட்ட சம்­பின்ஷிப் போட்­டியில் பதின்­நான்கு வய­திற்­குட்­பட்­டோ­ருக்­கான 'டி' பிரிவில் சென்.பீற்றர்ஸ் கல்­லூரி சம்­பியன் பட்­டத்தை வென்­றது.

இலங்கை மேசைப்­பந்­தாட்ட சம்­மே­ள­னத்­தினால் அகில இலங்கை ரீதியில் நடத்­தப்­பட்ட மேற்படி போட்­டி­யா­னது தொலுவ ஜெகத் ராஜபக்ஷ உள்­ளக விளை­யாட்­ட­ரங்­கில் கடந்த வாரம் நடை­பெற்­றது.

இதில் சென். பீற்றஸ் கல்­லூ­ரியின் ஈ.ஆர்.எஸ்.வோகன் (அணித் தலைவர்), அயேந்­திரா டீ கொஸ்ரா, அதீப் மிலார் மற்றும் முஸ்­தபா ஆகி­யோரை உள்­ள­டக்­யே அணியே சம்­பியன் பட்­டத்தை வென்­றது.

சென்.பீற்றர்ஸ் கல்­லூ­ரியின் மேசைப்­பந்­தாட்ட பயிற்­சி­யா­ள­ராக வசந்த பெரேரா  மற்றும் மேசைப்­பந்­தாட்­டத்தின் பொறுப்­பா­சி­ரி­ய­ராக மரி­யதாஸ் எட்வேட் ரவீந்­தி­ர­ரா­ஜா ஆகியோர் செயற்­ப­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. 

அதே­வேளை 2017ஆம் ஆண்­டுக்­கான தரப்­ப­டுத்தல் போட்­டியில் திறந்த ஆண்க­ளுக்­கான ஒற்­றையர் பிரிவில் சென். பீற்றர்ஸ் கல்­லூ­ரியின் பதின்­நான்கு வய­திற்­குட்பட் அணித் தலைவர் ஈ.ஆர்.எஸ். வோகன் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.