இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும்  இறுதியுமான தீர்க்கமான ஒருநாள் போட்டி தற்போது கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பங்களாதேஷ் முதலில் இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்துள்ளது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை சற்றுமுன்னர் வரை 5 ஓவர்களுக்கு 32 ஓட்டங்களை பெற்று விக்கெட் இழப்பின்றி துடுப்பெடுத்தாடி வருகின்றது.

Your Browser Do not Support Iframe

களத்தில் தரங்க மற்றும் குணதிலக்க ஆகியோர் உள்ளனர்.

இலங்­கைக்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்­டுள்ள பங்­க­ளாதேஷ் அணி இலங்­கை­யுடன் மூன்று போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளை­யா­டு­கி­றது.

இதன் முதல் போட்­டியில் 90 ஓட்­டங்­களால் பங்­க­ளாதேஷ் அணி வெற்­றி­பெற்று தொடரில் முன்­னிலை பெற்­றி­ருந்த நிலையில், இரண்­டா­வது போட்டி மழை கார­ண­மாக வெற்­றி­தோல்­வி­யின்றி நிறை­வ­டைந்­தது.

இந்­நி­லையில் இந்தத் தொடரின் மூன்­றா­வதும் கடை­சி­யு­மான போட்­டியை வென்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் பங்களாதேஷ் அணியும் தொடரை சமநிலைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இலங்கையும் களமிறங்கியுள்ளன.