மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாவிக்கரை வீதியில் உள்ள வீட்டின் கிணறில் இருந்து பிறந்த சிசுவின் சடலம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது.

நேற்று  இரவு வாவிக்கரை, மேல்மாடி வீட்டு வீதியில் உள்ள ஒருவரின் வீட்டின் கிணறில் இருந்தே இந்த சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சிசுவினை பிரசவித்த பெண் சீலையில் சுற்றி அதனுடன் கல்லைக்கட்டி வீட்டின் கிணற்றில் வீசிவிட்டுச்சென்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் குறித்த வீட்டில் வேலைசெய்துவந்த பெண்ணின் மீது சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் இந்த சிசு கிணற்றில் வீசப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு பொலிஸார் இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.