“ரசிகர்களின் பேஸ்புக், டுவிட்டர் விமர்சனங்களால் வீரர்களுக்கு அழுத்தமாம் : அது அவர்களின் உரிமை, எவரும் கட்டுப்படுத்த முடியாது்“

Published By: Priyatharshan

01 Apr, 2017 | 09:40 AM
image

இந்த விமர்­ச­னங்­களால் வீரர்­க­ளுக்கு அழுத்தம் அதிகரிக்கின்றது. அதற்காக அவர்களை விமர்சிப்பது தவறு என்றும் சொல்ல முடியாது. அழுத்தங்களை தாங்கிக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்வதே ஒரு கிரிக்கெட் வீரரின் தகுதி என இலங்கை கிரிக்கெட் அணியின் முகா­மை­யா­ளரும், முன்னாள் வீர­ர­ரு­மான அசங்க குரு­சிங்க தெரிவித்தார்.

இலங்கை - பங்­க­ளாதேஷ் அணிகள் மோதும் மூன்­றா­வதும் கடை­சி­யு­மான ஒருநாள் போட்டி இன்று கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதா­னத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. 

இன்று காலை ஆரம்­ப­மா­க­வுள்ள இந்தப் போட்­டியில் இலங்கை அணி கட்­டாயம் வெற்­றி­பெற்றே ஆக வேண்டும். அப்­படி வெற்­றி­பெற்­றாலும் தொடரை வெல்ல முடி­யாது என்­றாலும் கூட தொடரை இழக்­காமல் சம­நி­லையில் முடிக்க முடியும்.

இந்நிலையில் இந்தப் போட்டி குறித்து கருத்து தெரி­வித்த இலங்கை கிரிக்கெட் அணியின் முகா­மை­யா­ளரும், முன்னாள் வீர­ர­ரு­மான அசங்க குரு­சிங்க,

இலங்கை மிகவும் பல­மா­கத்தான் உள்­ளது. அதில் எந்த வித சந்­தே­கமும் இல்லை. அந்தத் தரு­ணங்­களில் சில தவ­று­களை விடும்­போது முடி­வுகள் மாறி­வி­டு­கின்­றன. 

அந்தத் தவ­று­களை சரி­செய்து கொண்டு இரண்­டா­வது போட்­டியில் கள­மி­றங்­கி­யி­ருந்தோம். ஆனால் துர­திர்ஷ்ட வச­மாக மழை பெய்ததால் வெற்றி நழு­வி­விட்­டது. 

அதனால் மூன்­றா­வது போட்­டியில் எமக்கு வெற்றி நிச்­சயம். அணியில் எவ்­வித மாற்­றமும் செய்­யப்­ப­ட­வில்லை. இரண்­டா­வது போட்­டியில் விளை­யா­டிய அதே அணிதான் கள­மி­றங்கும் என்றார்.

அதே­வேளை விமர்­ச­னங்கள் எழு­வது குறித்து கேட்­ட­போது, ஒரு கிரிக்கெட் வீரர் விமர்­ச­னங்­க­ளுக்கு அஞ்­சக்­கூ­டாது. அணி சரிவை சந்­திக்­கும்­போது ரசி­கர்­க­ளுக்கு கோபம் வரும். அது நியா­ய­மான ஒன்று.

நாம் விளை­யா­டி­ய­போதும் விமர்­ச­னங்கள் செய்­யப்­பட்­டன. ஆனால் அவை பத்­தி­ரி­கை­களாலும் வானொ­லி­களாலும் மட்­டுமே செய்யப்பட்டன. ஆனால் தற்­போது அப்­ப­டி­யல்ல. சமூக வலைத்­த­ளங்­க­ளான பேஸ்புக், டுவிட்டர் போன்ற வலைத்­த­ளங்­களில் அணி வீரர்­க­ளையும் அணி­யையும் விமர்­சிக்­கி­றார்கள்.

இந்த விமர்­ச­னங்­களால் வீரர்­க­ளுக்கு அழுத்தம் அதிகரிக்கின்றது. அதற்காக அவர்களை விமர்சிப்பது தவறு என்றும் சொல்ல முடியாது. அழுத்தங்களை தாங்கிக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்வதே ஒரு கிரிக்கெட் வீரரின் தகுதி என்றும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35