எதிர்­வரும் ஆறு மாதங்­களில்  இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வையும்  தேர்தல் முறை மாற்­றத்­தையும்   அடைந்து கொள்ள முடி­யா­விடின் ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யு­ட­னான தேசிய அர­சாங்­கத்தில்  அங்கம் வகிப்­பதில் அர்த்­த­மில்லை.  இந்த  இரண்டு விட­யங்­க­ளையும்  அடைந்­து­கொள்ள முடி­யா­விடின்  தேசிய அர­சாங்­கத்தை முறித்­துக்­கொள்­வதே நன்­றாக இருக்கும் என்று  சுதந்­திரக் கட்­சி யின் பேச்­சா­ளரும்  இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா  தெரி­வித்தார்.

எவ்­வா­றெ­னினும் எதிர்­வரும் ஆறு மாதங்­களில்  தேர்தல் முறை மாற்­றத்­தையும் முன்­னெ­டுத்து  இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வையும் பெற்­றுக்­கொள்ள முடியும் என நம்­பு­வ­தா­கவும்  அவர் குறிப்­பிட்டார்.  

ஐக்­கி­ய ­தே­சி­யக்­ கட்­சியும்இ சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் இணைந்து அமைத்­துள்ள தேசிய அர­சாங்­கத்தின் ஆயுட்­காலம்  எதிர்­வரும்  செப்­டெம்பர்  மாதத்­துடன் முடி­வ­டை­ய­வுள்ள நிலையில்  தேசிய அர­சாங்கம் மேலும் நீடிக்­குமா என வின­வி­ய­போதே அவர்  மேற்­கண்­ட­வாறு  குறிப்­பிட்டார். 

அவர்  இந்த விடயம் குறித்து  மேலும் குறிப்­பி­டு­கையில்,

புதிய அர­சி­ய­ல­மைப்பை முன்­னெ­டுப்­பதை விடுத்து அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தை  மேற்­கொள்­வதே  சாலச்­சி­றந்­த­தாக அமை­யு­மென  நாங்கள் நம்­பு­கிறோம்.  

அதா­வது சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிற்கு செல்­லாமல்  மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பலத்­துடன் மட்டும்  நிறை­வேற்­றிக்­கொள்ளும் வகை­யி­லான  திருத்­தத்தை   முன்­னெ­டுப்­பதன் மூலம்   நாம் எதிர்­பார்த்த இலக்கை அடை­யலாம். 

அதா­வது  தற்­போ­தைய சூழலில்  தேர்தல் முறை மாற்­றமும்  இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வுத் திட்­ட­முமே முக்­கிய விட­யங்­க­ளாக காணப்­ப­டு­கின்­றன.  அவ்­வாறு    தேர்தல் முறை மாற்­றத்­தையும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வையும் அடைந்து கொள்­வ­தற்கு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிற்கு செல்­ல­வேண்­டிய அவ­சியம் இல்லை. 

மாறாக மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பலத்­துடன் அவற்றை நிறை­வேற்­றிக்­கொள்ள முடியும். அதனால் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிற்கு செல்­லாமல்  மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்­றிக்­கொள்ளும் வகை­யி­லான திருத்­தத்­திற்கு செல்­வதே பொருத்­த­மாக அமையும்.  இது தொடர்­பி­லேயே நாம் சிந்­திக்­க­வேண்­டி­யுள்­ளது. 

அது­மட்­டு­மன்றி தேர்தல் முறை மாற்­றத்­தையும்   இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வையும் அடைந்­து­கொள்­வ­தற்­கா­கவே ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்­சியும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைத்­துள்­ளன.  எனவேஇ  அந்த தேசிய அர­சாங்­கத்தின் நோக்கம்   நிறை­வேற வேண்­டு­மாயின்  தேர்தல் முறை மாற்­றத்­தையும்  இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வையும்  அடைந்­து­கொள்­ள­வேண்டும்.  கடந்த 2015 ஆம்  ஆண்டு செப்­டெம்பர் மாதம்  இரண்டு வரு­டங்­க­ளுக்­கா­கவே   தேசிய அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்­டது. 

இந்த வருடம் செப்­டெம்பர் மாதத்­துடன் இரண்டு வரு­டங்கள் நிறை­வ­டைந்­து­விடும். அதற்­கி­டையில்   தேர்தல் முறை மாற்­றத்­தையும்  இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வையும் அடைந்து விட­வேண்டும். இல்­லா­விடின்    தேசிய அர­சாங்கம் அமைத்­த­தற்­கான  அர்த்­த­மே­இல்­லாமல்  போய்­விடும். 

மேலும் இன்னும்  ஆறு மாதங்­களில்   இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வையும்  தேர்தல் முறை மாற்­றத்­தையும் அடைய முடி­யா­விடின்   தேசிய அர­சாங்­கத்தை நீடிப்­ப­திலும் அர்த்­த­மில்லை.  அந்த திரு­ம­ணத்தை முடித் துக் கொள்வதே    சிறந்ததாக அமையும்.  

எவ்வாறெனினும் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள்  இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் தேர்தல் முறை மாற்றத்தில்   முன்னேற்றத்தைக் காண முடியும் என நாம்   நம்புகிறோம்.  அவ்வாறு இந்த விட யங்களில் வெற்றிபெற்றால்  மேலும் சில வருடங்களுக்கு தேசிய அரசாங்கத்தை   நீடி க்க முடியும்  என்றார்.