(க.கமலநாதன்)

ஐக்கிய நாடுகள் சபை அமர்வின் பக்க நிகழ்வுகளில் கலந்துக்கொண்டிருந்த அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்ளின் பிரதிநிதிகளும் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதுடன் இலங்கை இராணுவம் போர் குற்றம் இழைத்தாகவே குற்றம் சாட்டினார்கள் என ரியர் அத்மிரால் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை இராணுவம் யுத்த குற்றம் இழைத்தாக கொண்டு வந்த அறிக்கை முழுமையாக பொய்யான காரணங்களை உள்ளடக்கியெத சுட்டிக்காட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பத்தரமுல்லை  நெலும் மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.