DIMO நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள Tyre and Battery Mobile Service வசதி

Published By: Priyatharshan

31 Mar, 2017 | 05:36 PM
image

Diesel & Motor Engineering PLC (DIMO) நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் இடத்திற்கே சென்று சேவையை வழங்கும் சௌகரியத்தை அளிக்கும் வகையில், மற்றுமொரு முன்னெடுப்பை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் வீதியோர உதவு சேவையை நாடுகின்ற பொதுமக்களுக்கு உகந்த ஒரு தீர்வை “DIMO Tyre & Battery Mobile Service” வழங்குகின்றது.

இந்த சௌகரியமான சேவைகளை வாரத்தின் அனைத்து நாட்களிலும், 24 மணி நேரமும் பெற்றுக்கொள்ள முடியும். வீதியோர உதவிகள் தேவைப்படுபவர்களுக்கு சேவைகளை வழங்குவதற்காக அனைத்து உபகரண வசதிகளையும் கொண்ட பிக்அப் வாகனம் மற்றும் தொழில்நுட்பவியலாளரான சாரதியும் எப்போதும் தயாராக உள்ளனர்.

DIMO Tyre & Battery Mobile service மூலமாகக் கிடைக்கப்பெறுகின்ற சேவைகள் வருமாறு பட்டரியை இயக்கச் செய்தல் (jump start), பட்டரி சோதனை டயரிலுள்ள காற்று அளவு வீக்கம் டயரில் காற்றுப்போகும் வேளையில் மாற்று சக்கரத்தை பொருத்தல்ரூபவ் கார் பட்டரிகளின் விற்பனை மற்றும் டயரில் காற்றுப் போகும் போது திருத்த வேலைகள். வாடிக்கையாளர்கள் 0112449727 என்ற 24 மணி நேர பிரத்தியேக வாடிக்கையாளர் சேவை இலக்கத்தின் மூலமாக DIMO Tyre & Battery Mobile Service மையத்தைத் தொடர்புகொண்டுரூபவ் மேற்குறிப்பிட்ட சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

DIMO Tyre & Battery Mobile Service மையத்தின் திறப்பு விழா நிகழ்வானது 2017 பெப்ரவரி 28 ஆம் திகதியன்று DIMO 800-Mecedes Benz மையத்தில் இடம்பெற்றது. ரஞ்சித் பண்டிதகே (பணிப்பாளர் சபைத் தலைவர் - DIMO) கஹநாத் பண்டிதகே (பிரதம நிறைவேற்று அதிகாரி - DIMO), கலாநிதி ஏ எம். ஜமீல் (அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவர்), சண்ண வீரவர்த்தன (பணிப்பாளர் - DIMO) மற்றும் ரொஷான் சேரசிங்க (பொது முகாமையாளர் - DIMO Tyre பிரிவு).

DIMO Tyre & Battery Mobile Service உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்வதால் கிடைக்கும் பயன்கள் வருமாறு: 24 மணி நேர இலவச வீதியோர உதவு சேவை, DIMO டயர்கள், பட்டரிகள் மற்றும் DIMO இனால் சந்தைப்படுத்தப்படுகின்ற ஏனைய குறிப்பிட்ட உற்பத்திகளுக்கு (Osram, BOSCH மோட்டார் வாகன உற்பத்திகள், Kent உற்பத்திகள்) விசேட தள்ளுபடிகள். DIMO Tyre & Battery Mobile Service சேவையில் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்ள விரும்புகின்ற வாடிக்கையாளர்கள் அதனைப் பெற்றுக்கொள்வதற்கு 0777537036 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58