சுவற்றில் எச்சில் துப்புவதைத் தவிர்க்க ‘கடவுள்’ உதவி!

Published By: Devika

31 Mar, 2017 | 04:22 PM
image

இந்தியாவில், அரச கட்டடங்களில் பொதுமக்கள் எச்சில் துப்புவது உள்ளிட்ட தகாத செயல்கள் செய்வதைத் தவிர்க்க, சுவரோடுகளில் தெய்வ உருவங்களை அச்சிட்டு சுவர்களில் பதிப்பிக்க ஆரம்பித்துள்ளன.

உத்தரப் பிரதேசத்தின் தலைநகர் லக்னோவுக்கு சுமார் 25 கிலோமீற்றர் தொலைவில் உள்ள அரச கட்டடம் ஒன்றில், இதுபோன்ற ‘எச்சில் தாக்குதல்’களுக்கு ஆளாகக் கூடிய பகுதிகளில், மார்பிள் சுவரோடுகளில் தெய்வ உருவங்களை அச்சிட்டு அவற்றைப் பொருத்தியுள்ளனர்.

“மக்களின் இதுபோன்ற தகாத செயல்களைத் தவிர்ப்பதற்கு கண்காணிப்பு கெமராக்களைப் பொருத்தியிருந்தோம். ஆனால் அவை உரிய பலன் தரவில்லை. இதையடுத்தே சுவர்களில் கடவுள் உருவங்களைப் பதிய ஆரம்பித்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார் அரசு ஊழியர் ஒருவர்.

உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள ஆதித்யநாத் யோகியின் யோசனையின் பேரில் அறிமுகமாகவுள்ள இத்திட்டத்தின்கீழ் இந்துக் கடவுளரின் உருவங்கள் மட்டுமே பதியப்படவுள்ளது. 

இதற்கு முன்னரும், சுவர்களில் சிறு நீர் கழிப்பதைத் தடுப்பதற்காக இதேபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அது கணிசமான அளவு வெற்றியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right