(எம்.எம்.மின்ஹாஜ்)

கடுமையான வரட்சியினால் நாடு அழிந்து போகும் என்றும் ஆட்சி கவிழும் என்று ஒரு சிலர் எதிர்பார்த்தனர்.  எனினும் அப்படியான நினைவுகள் தவிடு போடியாகி விட்டன என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தற்போது வரட்சி இல்லை. குளங்கள் நிரம்பியுள்ளன. எனவே இனிமேல் இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே எமது இலக்காகும்.

இந்த இலக்கை அடைந்து கொள்வறத்கு வேறுப்பட்டுள்ள அரசியல் வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் கைகோர்த்து செயற்பட முன்வர வேண்டும்.

விமர்சனங்கள் முன்வைப்பது ஜனாநாயக நாடுகளின் சுபாவமாகும். எனினும் விமர்சனங்களுக்கு பின்னால் நாம் செல்லாம் எமது இலக்குகளை சிறப்பான முறையில் வெற்றிக்கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும்.

எனவே எமது இலக்கை வெற்றிக்கொள்வதற்கு அனைவரும் ஒற்றுமையுடன் கைகோர்க்க வேண்டும். அதன்போதே எமது இலக்கை அடைந்து கொள்ள முடியும். 

அபிவிருத்தியின் போது எமது தேசத்தின் முறைமையை கையாள வேண்டும். எங்கள் மீது நாங்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். சவால்கள் வரும் போது சவால்களுக்கு நாம் முகங்கொடுக்க வேண்டும். 

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பேண்தகு இலங்கை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்திற்கான கண்காட்சியை இன்று ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.